இனி வீட்ல தோசை மாவு இல்லாட்டி கூட கவலையே இல்ல… இருக்கவே இருக்கு இன்ஸ்டன்ட் அடை!!!

Author: Hemalatha Ramkumar
13 September 2024, 6:23 pm

பெரும்பாலானவர்களின் வீட்டில் இட்லி மாவு அல்லது தோசை மாவு நிச்சயமாக இருக்கும். காலை மற்றும் இரவு நேர உணவு என்பது இட்லி அல்லது தோசையோடு தான் ஓடும். தோசை மாவு இருந்தால் ஈஸியாக அன்றைய டிபனை சமாளித்து விடலாம். ஆனால் மாவு இல்லாத சமயத்தில் என்ன டிபன் செய்வது என்று யோசிப்பது பல பெண்களுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக நேரம் எடுக்காத டிபன் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே இவர்களுக்காக தோசை மாவு இல்லாத சமயத்தில் ஒரு இன்ஸ்டன்ட் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்
1 கப்- கோதுமை மாவு
1/2 கப்- ரவை
1 பெரிய வெங்காயம் நறுக்கியது
1 தக்காளி நறுக்கியது
2 பச்சை மிளகாய் நறுக்கியது
சிறிதளவு கொத்தமல்லி தழை
தேவையான அளவு உப்பு 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
3/4 கப் கெட்டியான தயிர் தேவையான அளவு தண்ணீர்

செய்முறை
இந்த இன்ஸ்டன்ட் அடை செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவு மற்றும் 1/2 கப் ரவையை ஒரு அகலமான பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

இந்த கலவையில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

பின்னர் ஒரு தக்காளி மற்றும் 2 பச்சை மிளகாயையும் நைசாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்னர் 3/4 கப் அளவு கெட்டியான தயிரை ஊற்றி மீண்டும் நன்றாக கிளறவும்.

அடுத்தபடியாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடை பதத்திற்கு மாவை கொண்டு வரவும்.

இப்போது அடை மாவு தயாராக உள்ளது.

தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.

இந்த மாவை வழக்கமான தோசை போல அதிகமாக பரப்ப கூடாது, ஊத்தாப்பம் போல ஊற்ற வேண்டும்.

இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியதும் காரசாரமான சட்னி வைத்து பரிமாறவும்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 304

    0

    0