அட்டகாசமான சுவையில் அனைவருக்கும் பிடித்த கோதுமை டேட்ஸ் அல்வா!!!

Author: Hemalatha Ramkumar
31 May 2022, 1:34 pm

பேரீச்சம் பழம் மற்றும் கோதுமை சேர்த்து செய்யப்படும் இந்த அல்வா, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ‌சாப்பிடுவர். வாங்க இந்த கோதுமை டேட்ஸ் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பேரீச்சம் பழம் – 50(கிராம்)

கோதுமை – 1 கப்

பால் -1/4 லிட்டர்

சர்க்கரை – 400(கிராம்)

முந்திரி – 25(கிராம்)

நெய் – 150( கிராம்)

செய்முறை:

*முதலில் பேரீச்சை பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும்.

* இன்னொரு அடுப்பில் நெய் மற்றும் கோதுமை சேர்த்துத் தளர்ச்சியாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

* பிறகு சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டுக் கரைத்து பாகாகி வரும் போது , பாலோடு வெந்து திரண்டிருக்கும் பேரீச்சையை நன்கு மசித்து, சர்க்கரை பாகில் சேர்க்கவும்.

* பிறகு அதில், வறுத்த கோதுமை மாவு மற்றும் மீந்திருக்கும் நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.

* நன்றாக நெய் பிரிந்து கரண்டியிலிருந்து வழுக்கி விழும் நிலையில் வந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி விடவும்.

* மிகவும் சுவையான, கமகமக்கும் கோதுமை பேரீச்சை அல்வா தயார்.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 892

    0

    0