சன்டே என்றாலே நான்-வெஜ் இல்லாமல் இருக்காது. அதிலும் மட்டன் என்றால் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பொதுவாக மட்டன் சமைப்பதற்கு சற்று நேரமாகும். ஆனால் பத்தே நிமிடத்தில் சுவையான மட்டன் கிரேவி எப்படி செய்வது என்பது பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம்- 2 கையளவு
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 3
இஞ்சி- ஒரு துண்டு
பூண்டு- 10
முந்திரி பருப்பு- 10
தேங்காய் துருவல்- 1 கப்
எண்ணெய்- 3 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
கரம் மசாலா- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
பிரியாணி இலை- 1
பட்டை- 2
கிராம்பு- 3
ஏலக்காய்- 3
கல்பாசி- சிறிதளவு
அன்னாசிப்பூ- 1
சோம்பு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 கொத்து
கொத்தமல்லி- ஒரு கையளவு
செய்முறை:
*முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் இரண்டு கையளவு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காய், ஒரு பட்டை, ஒரு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
*ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ, சோம்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*இப்போது நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
*தக்காளி வதங்கி வந்ததும் நன்கு சுத்தம் செய்து வைத்த மட்டனை சேர்த்து கிளறவும்.
*இதனுடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி கொள்ளலாம்.
*மட்டன் 25% வெந்தவுடன் நாம் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறவும்.
*கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
*இப்போது குக்கரை மூடி ஐந்து விசில் வரவிட்டு எடுக்கவும்.
*பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி மேலும் பத்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
*அவ்வளவு தான் சுவையான மட்டன் கிரேவி பத்தே நிமிடத்தில் தயார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.