குருமா ரெசிபி என்றாலே பல வகைகள் உண்டு. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி தக்காளி குருமா.
தக்காளி குருமா மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய சுவையான உணவு வகை. இந்த குருமாவை 20 நிமிடங்களுக்குள் செய்து விடலாம். இது இட்லி, தோசை, பூரி, சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். இந்த குருமா செய்ய வெங்காயம், தக்காளி தவிர வேறு எந்த காய்கறிகளும் தேவையில்லை.
வாங்க கமகமக்கும், ருசியான தக்காளி குருமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 1
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
கல்பாசி – சிறிதளவு
சோம்பு – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 3
தக்காளி – 4
பச்சைமிளகாய் – 1
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 1/2 கப்
அரைக்க வேண்டியவை:
தேங்காய் – 1/2 கப்
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 7
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 7
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
*முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அரைக்க வேண்டியவற்றை தனியே அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை , கிராம்பு, ஏலக்காய், கல்பாசி சேர்க்கவும்.
*பின்பு ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி தழை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்ததாக தக்காளி மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பின் தண்ணீர் சிறிதளவு ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
* பிறகு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான, கமகமக்கும் தக்காளி குருமா ரெடி.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.