மூன்றே நாட்களில் வாய்ப்புண், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக மொறு மொறு மணத்தக்காளி கீரை தோசை!!!

Author: Hemalatha Ramkumar
17 October 2022, 7:09 pm

மணத்தக்காளி கீரை பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. இது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியது. வாய்ப்புண், வயிற்றில் புண் இருப்பவர்கள் இந்த கீரையை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரையை வைத்து மொறு மொறு தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி பூண்டு பல் – 4
இஞ்சி துண்டு – 4
பச்சை மிளகாய் – இரண்டு சின்ன வெங்காயம் – 10 மணத்தக்காளி கீரை – ஒரு கைப்பிடி
தோசை மாவு – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.

*பின்னர் தோலுரித்த பூண்டு, இஞ்சி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*இப்போது சின்ன வெங்காயம் சேர்த்து அது கண்ணாடி போல மாறும் வரை வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்த மணத்தக்காளி கீரை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

*கீரை வதங்கிய பின் அனைத்து பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

*இந்த கலவையை நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இட்லி மாவில் சேர்த்து நன்கு கலந்து வழக்கம் போல தோசை சுட வேண்டியது தான்.

*அவ்வளவு தான்… ஆரோக்கியமான மொறு மொறு மணத்தக்காளி கீரை தோசை சாப்பிட தயாராக உள்ளது.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 675

    0

    0