குளிர் காலத்தில் தயிரை உறைய வைக்க உதவும் ஈசியான டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar22 November 2022, 7:27 pm
தயிரானது இந்திய உணவின் ஒரு இன்றியமையாத பகுதி என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதை உணவோடு சேர்த்துக்கொள்வது கூடுதல் சுவையை சேர்க்கிறது மற்றும் மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த தயிரை கடைகளில் வாங்குவதை விட பலர் இதனை தங்கள் வீடுகளில் செய்யவே விரும்புகின்றனர்.
ஆனால் குளிர்காலத்தில், ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை பாலில் பாக்டீரியா வளர்ச்சிக்கு தடைகளை ஏற்படுத்துவதால், அதை தயிராக மாற்றுவது கடினம். இருப்பினும் குளிர் காலத்தில் தயிரை உறைய வைக்க உதவும் சில ஹேக்ஸ் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
*குளிர் நாட்களில் தயிரை உறைய வைக்க சூடான பால் பயன்படுத்த வேண்டும். எனவே, உறையோடு பாலை சேர்ப்பதற்கு முன், அதனை சற்று அதிகமாக சூடாக்கவும். ஆனால் அது மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
*குளிர்காலத்தில் தயிர் உறைய வைக்க நீங்கள் வழக்கமாக சேர்க்கும் உறையை விட இரண்டு மடங்கு சேர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் கோடையில் ஒரு தேக்கரண்டி தயிர் பயன்படுத்தினால், குளிர்காலத்தில் இரண்டு தேக்கரண்டி தயிர் பயன்படுத்தவும்.
*தயிர் உறைய வைக்கும் பாத்திரத்தை வெதுவெதுப்பான நீர் கொண்ட மற்றொரு பாத்திரம் மீது வையுங்கள். தயிர் உறையும் வரை வெதுவெதுப்பான நீர் சூடாக இருப்பதை உறுதி செய்ய இந்த மொத்த செட்டப்பை மூடி வைக்கவும்.
*பால் மற்றும் உறையை சேர்த்த பிறகு அந்த பாத்திரத்தை மூடி ஒரு இருண்ட இடத்தில் வைக்கவும். இது தயிரை விரைவாக உறைய உதவி செய்யும்.
*தயிர் உறைய வைத்திருக்கும் பாத்திரத்தைச் சுற்றி ஒரு சூடான துணியை மூடவும். இது வெப்பத்தை வெளிப்படுத்த உதவும். பாத்திரத்தை நன்றாக மூடி உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.