தயிர் வைத்து சட்னியா… புதுவித ரெசிபியா இருக்கே…!!!
Author: Hemalatha Ramkumar15 February 2022, 1:30 pm
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, பொட்டுக்கடலை சட்னி, கார சட்னி என பல வகையான சட்னிகளை நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் தயிர் சட்னி சாப்பிட்டு உள்ளீர்களா…??
வித்தியாசமாக உள்ளதா.. ஆம், இப்போது இந்த வித்தியாசமான மற்றும் ருசியான தயிர் சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர்- 1 கப்
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
மல்லி தூள்- 2 தேக்கரண்டி
கரம் மசாலா- ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி
வெங்காயம்- 1
கடுகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
*முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து கொள்ளவும்.
*இதனோடு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
*இப்போது இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
*இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பின் நாம் கலந்து வைத்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.
*மசாலாக்களின் பச்சை வாசனை போன பின் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விடலாம்.
*அவ்வளவு தான்… சுவையான தயிர் சட்னி தயார்.