உங்க குழந்தைக்கு சுரைக்காய் பிடிக்காதா… இந்த மாதிரி பாயாசம் பண்ணி கொடுத்தா கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!!!

Author: Hemalatha Ramkumar
11 April 2022, 10:45 am

வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.அந்த வகையில் நாவிற்கு சுவையான, சுரைக்காய் பாயாசம் செய்யும் முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் -1(சிறியது)
நெய் -1டேபிள் ஸ்பூன்
பால்-1/2 லிட்டர்
சர்க்கரை -தேவையான அளவு
முந்திரி, திராட்சை -தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்-1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*சுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக்‌ கொள்ள வேண்டும்.

*பால் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*பின்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*பின்பு அதே நெய்யில் துருவிய சுரைக்காயை நன்கு வதக்கவும். வதக்கிய பின் காய்ச்சிய பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

*பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 1539

    2

    0