பீட்ரூட் மசாலா ரெசிபி: இந்த மாதிரி சமைத்தால் பீட்ரூட் வேண்டாம்னு யாரும் சொல்ல மாட்டாங்க!!!

Author: Hemalatha Ramkumar
14 April 2022, 3:44 pm

பீட்ருட் குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பீட்ருட்டை வைத்து பல ரெசிபிகள் உண்டு. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி பீட்ரூட் மசாலா. பீட்ருட் மசாலா சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் -300(கிராம்)
வெங்காயம் -2
தக்காளி -1(பெரியது)
கறிவேப்பிலை -ஒரு கைப்பிடி
கடுகு -1டீஸ்பூன்
உளுந்து -1டீஸ்பூன்
சோம்பு -1டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் -3
மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன்
தேங்காய் -1/4மூடி
பூண்டு -4பல்
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

அரைக்க:
தேங்காய், சோம்பு, பூண்டு, வரமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:
*பீட்ரூட்டை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

*பின்பு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதக்கிய பின் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய பீட்ரூட்டை சேர்க்கவும். பின் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

*பீட்ரூட் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!