உருளைக்கிழங்கை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்த, உருளைக்கிழங்கு மசாலாவை சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, தக்காளி சாதம் , வெரைட்டி ரைஸ் போன்ற ரெசிபிகளுக்கு சைடிஸாக தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். உருளைக்கிழங்கு மசால் மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4
வெங்காயம் – 2
தக்காளி – 1
பூண்டு – 4 பற்கள்
சோம்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள்- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
*முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து,தோலுரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
* பிறகு, பூண்டு மற்றும் சோம்பை தட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பின்பு, தட்டி வைத்துள்ள பூண்டு, சோம்பு விழுதை சேர்க்கவும்.
*பின் கறிவேப்பிலை ஒரு கொத்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு, வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்.
*உருளைக்கிழங்கை கிளறி விட்டு பின் சேர்க்க வேண்டிய மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
*பிறகு, மூடி போட்டு ஐந்து நிமிடம் கழித்து உருளைக்கிழங்கை கிளறி விட்டு, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* சுவையான, உருளைக்கிழங்கு மசால் தயார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.