அடுத்த முறை சிக்கன் எடுத்தா இந்த மாதிரி கிரேவி செய்து பாருங்க!!!
Author: Hemalatha Ramkumar21 ஏப்ரல் 2022, 4:03 மணி
நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி சிக்கன் கிரேவி. சிக்கனை வைத்து பல ரெசிபிகள் உண்டு. அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கிறது. நாம் செய்யும் இந்த சிக்கன் கிரேவி, சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை,நாண் என அனைத்திற்கும் சூப்பரான சைடிஸ்ஸாக இருக்கும். சுவையான, காரசாரமான இந்த சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2(பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க வேண்டியவை:
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
கல்பாசி – 1/2 ஸ்பூன்
அரைக்க வேண்டியவை:
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1டேபிள்ஸ்பூன்
பட்டை – சிறுதுண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு -10 பற்கள்
சின்ன வெங்காயம் – 5
மசாலாத்தூள்:
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
செய்முறை:
*முதலில் சிக்கனை 3அல்லது5 முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
*பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
*பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.
*பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
*நன்கு வதக்கிய பிறகு அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடவும். பிறகு தண்ணீர் சிறிதளவு ஊற்றி கிளறி விட்டு மூடி போட்டு 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
*பிறகு சிக்கன் , கிரேவி பதத்திற்கு வந்ததும். ஒரு கொத்து கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
*இப்போது சுவையான, காரசாரமான சிக்கன் கிரேவி தயார்.
0
0