மரியாதை தான் சுதந்திரம்… “கேப்டன் மில்லர்” போர்க்களத்தில் தனுஷ் – ஹாலிவுட்டையே மிஞ்சும் பர்ஸ்ட் லுக்!
Author: Shree30 June 2023, 7:53 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
மரியாதை தான் சுதந்திரம்… கேப்ஷனோடு தனுஷ் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் ஒரு போர்க்களத்தில் எண்ணற்ற வீரர்கள் தனுஷாள் கொல்லப்பட்டு கிடக்கிறார்கள். மேலும், தனுஷ் துப்பாக்கி ஒன்றை ஏந்திக் கொண்டு கவலையோடு நிற்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து படம் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.