நிறைவேறிய ஆசை; இது போதும் எனக்கு; இயக்குனர் சொன்ன மகிழ்ச்சி செய்தி

Author: Sudha
23 July 2024, 12:37 pm

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த இயக்குனர் சேரன்.நல்ல நடிகராகவும் தன் திறமையை பல திரைப்படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.சினிமாவில் இருக்கும் ஆர்வத்தால் சென்னை வந்தார் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார்.

கே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார்.தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து பொற்காலம்,வெற்றிக் கொடி கட்டு,பாண்டவர் பூமி,போன்ற சமூக அவலங்களை சித்தரிக்கும் திரைப்படங்களை இயக்கினார். இவருடைய திரைப்படங்கள் சாதாரண மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது.

இயக்குனர் சேரனின் நீண்டநாள் ஆசை ஒன்று தற்போது நிறைவேறி உள்ளது.இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிகர் டோவினா தாமஸ் ஹீரோவாக நடிக்கும் ‘நரிவேட்டா’ படத்தில் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிறார் சேரன்.மலையாள திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ