விதவிதமா அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணனும் … துணிவு பட நடிகை அதிர்ச்சி பேட்டி!

Author: Shree
17 May 2023, 9:23 am

பிரபல தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக மெர்சி சித்ரா கலைஞர் டிவி, சத்தியம் டிவி உள்ளிட்டவற்றில் செய்தி வாசிப்பாளினியாக இருந்து வந்தார். அத்துடன் திருமண நிகழ்வுகள், பிற கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பல்வேறு திரைப்படங்களுக்கு கூட டப்பிங் பணிகளை செய்வார். செய்தி தொகுப்பைத் தவிர, அவர் பிரச்சாரம் மற்றும் சமூக நல நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கிறார்.

இவர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீடியாவில் வேலை பார்க்கும் அனுபவத்தை குறித்து பேசிய அவர், ‘‘செய்தி வாசிப்பாளர் வேலை அவ்வளவு ஈஸியானது இல்லை. அன்றாடம் எல்லா செய்திகளைப் பற்றியும் நாம் தெரிந்திருந்தால் தான், திடீரென நேரலை வரும் போது, அது தொடர்பான கேள்வியை செய்தியாளரிடம் கேட்க முடியும்.

ஒரு செய்தி வாசிப்பாளருக்கு செய்தி வாசிப்பது மட்டும் வேலை அல்ல. அந்த செய்திக்கான வாய்ஸ் ஓவர் தருவது, ஸ்கிரிப்ட் எழுதுவது என எல்லா வேலையும் நாங்களே செய்வோம். அதை நேரில் பார்த்தால் தான் புரியும். வெளியில் இருந்து சுலபமாக விமர்சனம் செய்து விடலாம், ஆனால் உண்மையில் அது மிகவும் கஷ்டமான வேலை.

இந்த வேளைக்கு வந்த போது சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ஆடிஷன்களுக்கு ஆவளோடு சென்றேன். ஆனால், பல பேர் பல விதமான அட்ஜெஸ்ட்மென்ட் கேட்பார்கள். அதையும்தாண்டி வாய்ப்பு ஷூட்டிங் வரை சென்றால். என்ன போட்டோவுல பளீச்சின்னு இருக்கீங்க நேர்ல பார்த்தால் கருப்பா இருக்கீங்க என கேட்டு நிராகரித்து விடுவார்கள்.

இதன் பின்னர் இந்த தேவையில்லாத வேலையெல்லாம் விட்டுவிட்டு மீண்டும் செய்தி வாசிப்பாளர் வேலைக்கே சென்றுவிடலாம் என நினைத்து வந்துவிட்டேன். அஜித்துடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம். துணிவு படத்தில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் நடித்தேன். மேலும் அஜித்துடன் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டேன் என கூறினார்.

ஒரு சிலர் இதெல்லாம் செய்தால் தான் உங்களுக்கு வாய்ப்பு தர முடியும் என்றெல்லாம் கூறினார்கள். எனக்கு அது கஷ்டமாக இருந்தது. சினிமாவில் நான் பல கஷ்டங்களை இருந்தது. நான் சந்தித்த எல்லாமே பிரச்சினையாக தான் இருந்தது. நடிக்க வேண்டும் என்று நினைத்தால் இத்தனை பிரச்சனை வருமா என்று ஒரு கட்டத்தில் யோசிக்க ஆரம்பித்தேன். எதற்கு இது தேவையில்லாத வேலை என்று நினைத்து செய்தி வாசிப்பாளர் வேலையை ஒழுங்காக பார்ப்போம் என்று நினைத்தேன்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 650

    0

    0