பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர்.இவருடைய இயக்கத்தில் வந்த எல்லா திரைப்படங்களும் ஹிட் அடித்தன.
அந்த வகையில் ஹிந்தியில் உருவான த்ரீ இடியட்ஸ் திரைப்படத்தை தழுவி தமிழில் இயக்குனர் ஷங்கரால் தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் நண்பன்.இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இத்திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ஜீவாவின் தந்தையை விஜய் பின் சீட்டில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைப் போன்று ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அவருக்கு பின்னால் இலியானா அமர்ந்திருப்பார். இக்காட்சி படாமாக்கப் படும் போது ஜீவாவின் தந்தைக்குப் பின்னால் இயக்குனர் சங்கர் அமர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் “இது நல்லா இருக்கே” என கமெண்ட் செய்து வருகின்றனர்.