9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்ஷனை அள்ளியது யார் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களுக்குமே இருந்து வருகிறது.
துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.
இந்நிலையில், 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், துணிவு ரூ. 65 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில், வாரிசு படமும் ரூ. 63 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தன்னுடைய முதல் இடத்தை அப்படியே தக்கவைத்துள்ளது துணிவு.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மீது நடிகர் விஜய் சற்று கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்க்கு காரணமே வாரிசு படம் தெலுங்கில் தள்ளிப்போனது தான் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவித்துவிட்டு, திடீரென சில காரணங்களால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் இரு நாட்களுக்கு பின் தேதி வெளியாகும் என தில் ராஜு அறிவித்தார்.
இதனால் விஜய் சற்று அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தில் ராஜு மீது விஜய்க்கு கோபம் வந்ததாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அறிவித்தபடி 11ம் தேதியே தெலுங்கிலும் வாரிசு படத்தை வெளியிட்டிருந்தால், இன்னும் வசூலை அள்ளியிருக்கும் என்று விஜய் நினைக்கிறார் போலிருக்கு.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.