தினம் 2 வேக வைத்த முட்டை… உங்க எல்லா உடல்நல பிரச்சினைக்கும் பதில் கொடுக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
20 September 2024, 4:36 pm

எப்போதும் பிஸியாக இருப்பதால் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு நமக்கு நேரமே கிடைப்பது கிடையாது. சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் மட்டுமே நம் உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கும். ஆனால் இதனை செய்வதற்கு நாம் தவறி விடுகிறோம். எனவே உங்களுடைய வேலையை எளிதாக்குவதற்கு தினமும் இரண்டு வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலுக்கு தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை பெறலாம். இரண்டு வேக வைக்க வேக வைத்த முட்டைகள் என்பது ஊட்டச்சத்தின் களஞ்சியமாக உள்ளது. இதில் அதிக தரம் வாய்ந்த புரோட்டீன் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளதால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக அமைகிறது. இரண்டு வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

புரோட்டின் 

ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டின் உள்ளது. ஒரு நபருக்கு அவருடைய உடல் எடையில் உள்ள ஒவ்வொரு கிலோ கிராமுக்கும் 0.8 கிராம் புரோட்டின் தேவைப்படுகிறது. முட்டையில் 6 கிராம் புரோட்டின் இருப்பதால் இது நம்முடைய புரத உட்கொளிலில் பெரும் பகுதியை வகிக்கிறது. இது தவிர பீன்ஸ், இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய தினசரி புரோட்டின் தேவையை நாம் பூர்த்தி செய்யலாம். 

வைட்டமின் ஏ 

இரண்டு வேக வைத்த முட்டைகளில் 540 IU வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ என்பது ஆரோக்கியமான பார்வை, நோய் எதிர்ப்பு செயல்பாடு, செல் வளர்ச்சி மற்றும் பிரிவுக்கான ஆதரவு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 3000 IU வைட்டமின் ஏ தேவைப்படுகிறது. 

வைட்டமின் டி 

இரண்டு வேக வைத்த முட்டைகளில் 82IU வைட்டமின் டி உள்ளது. வைட்டமின் டி சத்தானது கால்சியம் உறிஞ்சுதல், எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு அவசியமானது. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ரிக்கெட்ஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்கிறது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 600IU வைட்டமின் டி தேவைப்படுகிறது. 

வைட்டமின் பி12 

வேக வைத்த முட்டைகளில் 1.6 mcg வைட்டமின் பி12 உள்ளது. வைட்டமின் பி12 என்பது சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக்கம், நரம்பு செயல்பாடு மற்றும் டிஎன்ஏ தொகுப்புக்கு அவசியமானது. இது ஆற்றல் அளவுகளை பராமரிக்கவும், அறிவுத்திறன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு தினமும் 2mcgக்கும் அதிகமான வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. 

வைட்டமின் பி2 

முட்டையில் 0.6 கிராம் வைட்டமின் பி2 உள்ளது. வைட்டமின் பி2 ஊட்டச்சத்து என்பது கொழுப்புகள், புரோட்டீன்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. இந்த வைட்டமின் ஆரோக்கியமான சருமம் மற்றும் கண்களுக்கு அவசியம். தினமும் பெரியவர்களுக்கு 1.3mg வைட்டமின் பி2 தேவைப்படுகிறது. 

போலேட்

ஒவ்வொரு முட்டையிலும் 24mcg போலேட் உள்ளது. போலேட் என்பது டிஎன்ஏ தொகுப்பு, சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த செல்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம். அதிலும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் இந்த ஊட்டச்சத்து மிகவும் தேவை. மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 400mcg போலேட் தினமும் தேவைப்படுகிறது. 

செலினியம் 

இரண்டு முட்டைகளில் 28mcg செலினியம் காணப்படுகிறது. செலினியம் என்ற முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் செலினியம் தைராய்டு செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு தருகிறது. செலினியம் ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வதற்கு முட்டைகள் ஒரு சிறந்த உணவாக அமைகிறது. ஒரு நாளைக்கு மனிதர்களுக்கு 55mcg செலினியம் தேவைப்படுகிறது. 

கோலின் 

முட்டைகளில் 294 mg கோளின் உள்ளது. இரண்டு முட்டைகள் ஒரு நபரின் பாதி அளவு அன்றாட கோலின் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த ஊட்டச்சத்து மூளை ஆரோக்கியம், கல்லீரல் செயல்பாடு போன்றவற்றிற்கு அவசியம். மேலும் இது ஞாபக சக்தி மற்றும் அறிவு திறன் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு கொண்டுள்ளது. 

இரும்புச்சத்து

இரண்டு வேக வைத்த முட்டைகளில் 1.2mg இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் மற்றும் மயோகுளோபின் உற்பத்திக்கும், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுவதற்கும், ஒட்டுமொத்த ஆற்றல் அளவுகளுக்கும் அவசியமாகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 225

    0

    0