புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் யாரும் அதனை தீவிரமாக எடுத்துக் கொள்வது கிடையாது. உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவிலான நபர்கள் புகையிலை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதிலும் இந்த புகையிலை பயனர்களில் 8.5% நபர்கள் இளைஞர்களாக உள்ளனர். புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு பல்வேறு விதமான முயற்சிகள் எடுத்து வந்தாலும் தொடர்ந்து புகையிலை பயன்படுத்துவோர் அதற்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. ஒருவேளை நீங்களும் வழக்கமான முறையில் புகை பிடிக்கும் நபர் என்றால் புகை பிடிப்பதால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள வழக்கமான பரிசோதனைகளை நீங்கள் செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் புகை பிடிப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
லங்கு ஃபங்க்ஷன் டெஸ்ட் (ஸ்பைரோ மெட்ரி)
இந்த சோதனை மூலமாக உங்களது நுரையீரல் எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது கண்டறியப்படும். இது கிரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசிஸ் போன்ற மோசமான நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கு உதவுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடுவதால் தேவையான சிகிச்சை அளித்து நோய் தீவிரமடைவதை தவிர்க்கலாம்.
லோ டோஸ் CT ஸ்கேன் புகைப்பிடிப்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக 50 வயதிற்கு அல்லது பல வருடங்களாக புகை பிடித்துக் கொண்டிருப்பவர்கள் நுரையீரல் புற்றுநோய் சோதனைக்காக லோ டோஸ் CT ஸ்கேன் செய்து கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை நுரையீரல் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பதற்கு உதவுகிறது. இதன் காரணமாக அதற்கு வெற்றிகரமான சிகிச்சை அளிக்க முடியும்.
கார்டியாக் சோதனை
இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு புகைப்பிடிப்பது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே எலக்ட்ரோ கார்டியோகிராம், லிப்பிட் ப்ரொபைல் மற்றும் ரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற கார்டியாக் பரிசோதனைகள் மிகவும் அவசியம்.
கம்ப்ளீட் பிளட் கவுண்ட் (CBC)
இந்த சோதனை புகைப்பிடிப்பது காரணமாக ரத்தத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கு உதவும். உதாரணமாக அதிக அளவு வெள்ளை ரத்த அணுக்கள் எண்ணிக்கை இருப்பது வீக்கம் அல்லது ஹீமோகுளோபின் அளவுகளில் மாற்றங்களை குறிக்கலாம்.
வாய் புற்றுநோய்க்கான சோதனை
புகை பிடிப்பவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே பல் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் உதவியுடன் வாய், தொண்டை அல்லது நாக்கு ஆகியவற்றில் புற்று நோய்க்கு முந்தைய நிலை அல்லது புற்றுநோய் இருப்பதை உறுதி செய்து அதற்கான ஆரம்ப சிகிச்சையை நீங்கள் பெறலாம்.
லிவர் ஃபங்க்ஷன் டெஸ்ட் (LFT)
புகைப்பிடிப்பது கல்லீரலில் செயல்பாட்டை பாதிக்கலாம். குறிப்பாக புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளது. எனவே இந்த சோதனை செய்வது கல்லீரல் சேதத்தை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கு உதவும். இதன் விளைவாக கல்லீரல் சேதம் மோசமடையாமல் தவிர்ப்பதற்கு நீங்கள் தேவையான சிகிச்சைகள் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களை செய்யலாம்.
மேலும் படிக்க: டீக்கடை பெஞ்சில் டிஜிபி சைலேந்திர பாபு : புகை பிடித்தவர்களிடம் அறிவுரை கூறிய வீடியோ வைரல்!!
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.