பம்ப் செய்யப்பட்ட தாய்ப்பாலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட சான்ஸ் இருக்கா…??? 

Author: Hemalatha Ramkumar
2 December 2024, 3:15 pm

குழந்தை வளர்ப்பு என்பது தற்போது முன்பு போல கிடையாது. நம்முடைய பெற்றோர்கள் நம்மை வளர்ப்பதற்கு பின்பற்றிய முறைகளை தற்போதுள்ள பெற்றோர்கள் பின்பற்றுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். எளிமையான முறைகளை பின்பற்றி நம்முடைய பெற்றோர்கள் அவர்களால் முடிந்தவரை நம்மை சிறப்பாக வளர்த்தார்கள். ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் இன்னும் கூடுதல் கவனத்துடன் தங்களுடைய குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுக்காமல் இருப்பது, சீக்கிரமாகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். 

தாய்ப்பால் கொடுப்பதும் தற்போது நவீன வாழ்க்கையில் தகவமைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் தங்களுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரஸ்ட் பம்ப் மூலமாக தாய்ப்பாலை எடுத்து அதனை சேகரித்து வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகில் இல்லாத போதும் கூட குழந்தைக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர். 

இது குறிப்பாக வேலை செய்யும் பெற்றோர்கள் மற்றும் அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவியாக உள்ளது. ஆனால் இவ்வாறு பம்ப் செய்யப்பட்ட பால் நல்லதா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. நேரடியாக தாய்ப்பால் கொடுப்பதற்கும் பம்ப் செய்யப்பட்ட பாலை கொடுப்பதற்கும் ஒரு சில வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி பார்க்கலாம். 

நேரடியாக தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அது குழந்தையின் தேவைகளை தகவமைத்துக் கொள்வதற்கு எளிதாக அமைகிறது. ஏனெனில் இந்த செயல்முறையின் பொழுது பல ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இது பாலின் ஊட்டச்சத்துக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு பண்புகளை மேம்படுத்துகிறது. கூடுதலாக நேரடியாக தாய்ப்பால் ஊட்டும் பொழுது கொழுப்புகள் சமமாக பங்கிடப்படுகிறது. இது பம்ப் செய்யப்பட்ட பாலில் சற்று கடினமான விஷயமாக அமைகிறது. 

பாட்டிலில் உள்ள தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள், கொழுப்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு காரணிகள் தக்க வைக்கப்படுவதால் தாய்ப்பால் ஊட்டுதல் சாத்தியம் இல்லாத போது இது சிறந்த மாற்றாக அமைகிறது. எனினும் இந்த சேமிப்பு செயல்முறையின் காரணமாக ஒரு சில ஊட்டச்சத்துக்கள் அழிந்து போகலாம். அதிலும் குறிப்பாக பாலை  பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட நீண்ட நேரத்திற்கு ஃப்ரீசரில் சேமித்து வைக்கும் பொழுது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து போவதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. 

எனவே தாய்ப்பாலை பாட்டிலில் சேமித்து வைக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தமான கண்டைனரில் மட்டுமே பாலை சேமித்து வைக்க வேண்டும். மேலும் பிரிட்ஜில் அதனை சரியான வெப்ப நிலையில் வைப்பதும் அவசியம். அதற்கான விதிமுறைகளை நீங்கள் பின்பற்றி வந்தால் அதில் உள்ள புரோட்டீன்கள், கொழுப்புகள் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிபாடிகள் ஆகிய அனைத்தும் தாய்ப்பால் ஊட்டுதல் மூலமாக கிடைக்கும் ஃபிரெஷ்ஷான தாய்ப்பாலை போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும். 

இதையும் படிக்கலாமே: காபி குடிப்பதற்கான சரியான நேரம் எது…???

ஆனால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய் மற்றும் குழந்தை இடையேயான பந்தம் வலுப்பெறும். தாய்ப்பாலை நேரடியாக கொடுப்பதால் அதற்கு எந்த ஒரு முன்னேற்பாடு அல்லது கூடுதல் செலவோ ஆகாது. மேலும் தாய்ப்பாலை நேரடியாக கொடுக்கும் பொழுது அதனால் அலர்ஜி, ஆஸ்துமா, உடல் பருமன் மற்றும் தொற்றுகள் போன்றவை ஏற்படும் என்பதற்கான பயம் இல்லாமல் இருக்கலாம். 

எனினும் வேறு வழி இல்லாமல் தாய்ப்பாலை பம்ப் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்மார்கள் அதற்கான சரியான விதிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. தாய்ப்பாலை பம்ப் செய்து எடுக்கும் பொழுது எப்பொழுதும் அதில் நேரத்தையும் தேதியையும் குறித்து வைத்துக் கொள்வது அவசியம். மேலும் அதனை குழந்தைக்கு கொடுக்கும் பொழுது தாய்ப்பால் அறை வெப்பநிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

அறை வெப்ப நிலையில் உள்ள தாய்ப்பாலை 4 மணி நேரம் வரை குழந்தைக்கு கொடுக்கலாம். ஃபிரிட்ஜில் 4℃ல் சேமித்து வைத்த பாலை 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதுவே ஃப்ரீசரில் வைத்த பால் 6 முதல் 12 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். எனினும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக கிடைக்க 6 மாதங்களுக்குள் பயன்படுத்துவது அவசியம். 

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 116

    0

    0