கிரீன் டீயை விட அதிக சத்துக்கள் கொண்ட அவகாடோ பழ விதை!!!

Author: Hemalatha Ramkumar
9 November 2024, 12:36 pm

நம்மில் பெரும்பாலானோர் அவகாடோ பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் குறித்து அறிவோம். ஆனால் அவகாடோ பழத்தில் உள்ள விதைகளும் அதே அளவு பலன்களை நமக்கு தரும் என்பது பலருக்கு தெரிவதில்லை. எப்பொழுதுமே அவகாடோ விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம். இருப்பினும் அது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழ்ந்து நமக்கு பல்வேறு வழியில் நன்மைகளை தருகிறது. எனவே அவகாடோ விதைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்க்கலாம். 

ஆன்டி-ஆக்சிடன்ட்

அவகாடோ விதையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் நமது உடலில் உள்ள செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களோடு போராடுவதற்கு இது உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் நம்முடைய  செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி முன்கூட்டியே வயதான அறிகுறிகளை ஏற்படுத்துவது மற்றும் பிற நாள்பட்ட நோய்களை உண்டாக்குவது போன்ற பிரச்சனைகளை தருகிறது. அவகாடோ விதைகளில் கிரீன் டீ யை போலவே பாலிபீனால்கள் உள்ளன. இது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை போக்கி உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது. 

நார்ச்சத்து

அவகாடோ விதைகளில் உள்ள நார்ச்சத்து நம்முடைய செரிமானத்திற்கு உதவுகிறது. மலம் எளிமையாக வெளியேறுவதற்கு துணை புரிந்து மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. இந்த விதையில் நீரில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் இது நம்முடைய குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்த விதைக்கு வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குவதற்கு இது சிறந்தது.

இதையும் படிக்கலாமே: நாற்பதிலும் யங்கா ஃபீல் பண்ண வைக்கிற ஃபேஸ் பேக்ஸ்!!!

நோய் எதிர்ப்பு சக்தி 

அவகாடோ விதைகளில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் இருப்பதால் இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த விதைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதன் காரணமாக நமது உடலில் உள்ள தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. 

இதய ஆரோக்கியம் 

அவகாடோ விதைகளில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. இதனால் எந்த விதமான இதய நோய்களும் நமக்கு ஏற்படாது. 

உடல் எடை பராமரிப்பு

நார்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த விதைகள் நம்மை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வோடு வைக்கிறது. அதிக நார்ச்சத்து இருப்பதால் இது நம்முடைய பசியை கட்டுப்படுத்தி அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்கிறது. எனவே உடல் எடையை அதிகரிப்ப நினைப்பவராக இருந்தாலும் சரி, உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தாலும் சரி இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 155

    0

    0