யோகா செய்யும் போது மறந்தும்கூட இவற்றை செய்து விடாதீர்கள்!!!

Author: Hemalatha Ramkumar
17 October 2022, 3:41 pm

ஒரு வழக்கமான மற்றும் நிலையான யோகா பயிற்சி நம் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் அதிசயங்களைச் செய்யும். இருப்பினும் யோகா செய்யும் போது, நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

1. அதிகமாக ஸ்ட்ரெயின் செய்து கொள்ள வேண்டாம். உங்களால் முடியும் அளவு செய்தால் போதுமானது.

2. பயிற்சியின் போது இயற்கைக்கு மாறான முறையில் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ளாதீர்கள். சாதாரணமாக சுவாசிக்கவும்.

3. நீங்கள் சோர்வாக இருக்கும்போது யோகா பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

4. தனியாக பயிற்சி செய்யாதீர்கள். நிபுணரின் வழிகாட்டுதலின்படி மட்டுமே யோகா செய்யுங்கள். ஏனெனில், இது தசை பிடிப்பு அல்லது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

5. பயிற்சியின் போது இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். காலணிகளை அணிய வேண்டாம். குறிப்பாக இறுக்கமான மேல் உடல் ஆடைகள் விலா எலும்பு மற்றும் நுரையீரலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும். இது முழுமையற்ற சுவாசத்தை விளைவிக்கும்.

6. யோகா பயிற்சி செய்த உடனடியாக குளிக்க வேண்டாம். உடலை சாதாரணமாக உலர விட்டு, பின்னர் குளிக்கவும்.

7. மாதவிடாய் சுழற்சியின் போது, ​​தலைகீழான ஆசனங்களைச் செய்யாதீர்கள். இது போன்ற சமயங்களில் தளர்வு மற்றும் சுவாச நுட்பங்களைச் செய்வது சிறந்தது.

8. யோகாவுக்குப் பிறகு அதிக தீவிரம் கொண்ட எந்த உடற்பயிற்சியையும் செய்ய வேண்டாம். சிறந்த பலனைப் பெற யோகா பயிற்சிக்கு முன் அதைச் செய்யுங்கள்.

9. பயிற்சியின் போது அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். பயிற்சியின் போது உங்கள் தாகத்தை சமாளிக்க மிதமான அளவில் தண்ணீர் குடிக்கலாம்.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…