கண்ணாடிய கழட்டி வீச ஆசையா இருந்தா மட்டும் இதெல்லாம் பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
24 September 2024, 6:00 pm

நம்முடைய கண் ஆரோக்கியம் என்பது நமது வயது மற்றும் பல்வேறு காரணிகளின் விளைவாக நாளுக்கு நாள் குறைவது வழக்கம். பாரம்பரிய இந்திய மருத்துவமான ஆயுர்வேதம் கண்பார்வையை தக்க வைத்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் பல்வேறு இயற்கையான யுக்திகளை பரிந்துரை செய்கிறது. உங்களுடைய நீண்ட கால கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு ஆயுர்வேத சிகிச்சைகள் உதவுகிறது. அந்த வகையில் அன்றாடம் ஒரு சில எளிமையான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமாக உங்களுடைய கண் ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிக்கலாம். அவ்வாறான ஒரு சில வழக்கங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம். 

குளிர்ந்த நீரில் கண்களை கழுவுதல்

உங்களுடைய நாளை குளிர்ந்த நீரைக் கொண்டு கண்களை கழுவுவதன் மூலமாக துவங்குங்கள். ஆயுர்வேத மருத்துவத்தின்படி, கண்களை குளிர்ந்த நீரில் காலை கழுவுவது கண்களை அமைதிபடுத்தவும், அவற்றை மீட்டமைக்கவும் உதவும். கூடுதலாக, இதனை செய்யும் பொழுது உங்கள் வாயில் தண்ணீரை வைத்துக் கொள்வது உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவும். நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் அதிக அளவு சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை எனில் அது கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். 

கண் பார்வையை மேம்படுத்த திராடகா என்ற மருத்துவ பயிற்சி 

திராடகா என்பது ஒரு சிறிய பொருளை நீண்ட நேரத்திற்கு பார்ப்பது ஆகும். இருட்டான ஒரு அறையில் அமைதியாக அமர்ந்து கண்களை சிமிட்டாமல் ஒரு சில நிமிடங்களுக்கு நெய் விளக்கை பார்க்க வேண்டும். இது கண்களை வலுவடையச் செய்யும் நாளடைவில் உங்களுடைய கண் நரம்புகளை ஊக்குவித்து நரம்புகள் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கண்பார்வையை அதிகரிக்கும். 

ஆயுர்வேத மூலிகைகளின் அற்புதம் 

பல வருடங்களாக நெல்லிக்காய், திரிபலா போன்ற ஆயுர்வேத மருந்துகள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்சிடன்ட் ஆக செயல்படுகிறது. திரிபலாவில் செரிமானத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. 

நெய் பயன்படுத்துவது 

நெய் என்பது அதன் மீட்டமைக்கும் பண்புகளுக்காக ஆயுர்வேதத்தில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கண் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும். கண்களுக்கு போஷாக்கு அளிக்கவும், அதில் உள்ள வீக்கத்தை குறைக்கவும் ஆயுர்வேத சிகிச்சையில் நெய் பயன்படுகிறது. நல்ல கண் பார்வையை பெறுவதற்கு தினமும் ஒரு ஸ்பூன் அளவு நெய்யை சாப்பிட வேண்டும். 

எளிமையான கண் பயிற்சிகளை செய்யவும்

எளிமையான கண் பயிற்சிகள் கண்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதில் இருக்கும் அழுத்தத்தை குறைக்கும். விரைவாக கண்களை சிமிட்டுவது, உள்ளங்கையை வைத்து கண்களை மூடி கொள்வது, வட்ட இயக்கங்களில் கரு விழிகளை சுற்றுவது போன்றவற்றை செய்யும் பொழுது கண் தசைகள் வலுவடையும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 முதல் 10 நிமிடங்கள் இதனை செய்தாலே குறிப்பிடத்தக்க மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். 

கண் ஆரோக்கியத்திற்கான யோகா பயிற்சிகள் 

Yoga Health Tips

சர்வாங்காசனா மற்றும் ஷிர்ஷாஷனா போன்ற ஒரு சில யோகா பயிற்சிகள் கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண்ண நரம்புகளில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கும். அடிக்கடி இவற்றை செய்வது உடலுக்கும் நன்மை அளிக்கும், கண்களுக்கு ஊட்டமளிக்கும். 

மேலும் படிக்க: கோடை வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்???

சரிவிகித உணவை சாப்பிடவும் 

கண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு சரிவிகித உணவு அவசியம். உங்களுடைய உணவில் கட்டாயமாக வைட்டமின் A, C, E போன்ற கண் பார்வைக்கு அவசியமான வைட்டமின்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். பாதாம் பருப்பு, கேரட் பீட்ரூட் பச்சை இலை காய்கறிகள் போன்றவை இதற்கான சிறந்த ஆப்ஷன்கள். இது தவிர உங்கள் உணவில் நெய் சேர்ப்பது கண்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும். 

ஸ்கிரீன் நேரம் 

இன்றைய நவீன உலகில் அதிகப்படியான ஸ்கிரீன் நேரம் நம்முடைய கண்களை சேதபடுத்தலாம். எனவே கம்ப்யூட்டர் அல்லது ஃபோன்களில் வேலை செய்யும் பொழுது இடையிடையே அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்வது அவசியம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 மீட்டர் அப்பால் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்க வேண்டும். இது கண் தசைகளுக்கு ஓய்வளித்து கண்களில் அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். மேலும் எப்போதும் கம்ப்யூட்டர் அல்லது ஃபோனில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பு கண்ணாடிகளை அணியலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Bismi Criticized Nayanthara கண்ணை மறைத்த பண வெறி.. நயன்தாராவை விளாசிய பிரபலம்!!
  • Views: - 221

    0

    0