வயிறு ஆரோக்கியத்தை மோசமாக்கும் பழக்க வழக்கங்கள்!!!
Author: Hemalatha Ramkumar17 January 2025, 12:16 pm
நல்ல வயிறு ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. “நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுவாகவே நாம் இருப்போம்” என்ற பழங்கால பழமொழியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அப்படி நாம் சாப்பிடும் எந்த ஒரு விஷயமும் நம்முடைய உடல் செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான வயிறு என்பது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. இது சரியாக நடந்தால் மட்டுமே நமக்கு போதுமான ஆற்றல், சரும ஆரோக்கியம் மற்றும் மன தெளிவு கிடைக்கும்.
மாறாக மோசமான வயிறு ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. இதன் விளைவாக நமக்கு அசௌகரியம், சோர்வு மற்றும் ஊட்டச்சத்து உறுஞ்சுதலில் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த வகையில் நம்முடைய வயிறு ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மோசமான உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்
அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நம்முடைய வயிறு ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் திடீர் அதிகரிப்பு வீக்கத்தை ஏற்படுத்தி, குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை சீர்குலைத்து, அதனால் செரிமான பிரச்சனைகள் உண்டாகும்.
காலை உணவை தவிர்ப்பது
காலை உணவு என்பது நம்முடைய வயிறு ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரவு முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து காலை நேரத்தில் அந்த விரதத்தை நீங்கள் கலைக்காவிட்டால் அது செரிமான பிரச்சனைகள் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடலில் இயற்கையான மெட்டபாலிசம் செயல்முறை பாதிக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம்.
நார்ச்சத்து இல்லாத உணவு
நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாமல் இருந்தால் அது உங்களுடைய வயிறு ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை பாதித்து இரிட்டபுள் பவள் சிண்ட்ரோமை ஏற்படுத்துகிறது.
இதையும் படிக்கலாமே: தை மாசத்துல கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்களா… புது பொண்ணுக்கான குலோ பெறுவதற்கு இந்த சீக்ரெட் டிப்ஸ் உங்களுக்காக!!!
அதிக கொழுப்பு நிறைந்த உணவு
கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவை சாப்பிடுவதும் நம்முடைய வயிறு ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். அளவுக்கு அதிகமான கொழுப்பு செரிமானத்தை மெதுவாக்கி வயிற்று உப்புசம் மற்றும் குமட்டலை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் இதனால் வயிறு வலி ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் பித்தப்பை கற்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.
அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நம் வயிற்றுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை அடிட்டிவ்கள், பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் உப்பு குடலில் உள்ள நுண்ணுயிரிகளை சமநிலையை பாதிக்கும். இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்று உப்புசம், வீக்கம் மற்றும் வயிறு அசௌகரியம் ஏற்படும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.