டிரை ஸ்கின் பிரச்சினைக்கு தீர்வு தரும் வாழைப்பழ ஃபேஷியல்!!!

Author: Hemalatha Ramkumar
17 January 2025, 5:28 pm

குளிர்ந்த வானிலை, குறைவான ஈரப்பதம் மற்றும் வீட்டிற்குள் இருக்கும் வெப்பம் காரணமாக ஏற்படும் வறட்சி விளைவுகளால் நம்முடைய சருமம் இறுகி, சொரசொரப்பாகி, எரிச்சல் நிறைந்ததாக மாறலாம். இந்த சமயத்தில் உங்களுடைய சருமமானது அதன் இயற்கை ஈர்ப்பதத்தை விரைவாக இழந்து சேதத்திற்கு ஆளாகிறது. இது போன்ற சூழ்நிலையில் உங்களுடைய சருமத்திற்கு வாழைப்பழம் ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது. வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் எண்ணெய் நிறைந்த வாழைப்பழம் போஷாக்கு மற்றும் ஈரப்பதத்தின் இயற்கையான மூலமாக அமைகிறது.

வாழைப்பழங்களில் காணப்படும் பொட்டாசியம் தோலில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. அதே நேரத்தில் வைட்டமின் A ஊட்டச்சத்து சேதமடைந்த தோலை சரி செய்கிறது. உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் வாழைப்பழம் அடிப்படையிலான ஃபேஸ் மாஸ்குகளை பயன்படுத்துவது வறண்ட சருமத்தை எதிர்த்து போராடவும், இழந்த ஈரப்பதத்தை மீட்டு எடுக்கவும் சருமத்தின் இயற்கையான பொலிவை வழங்கவும் உதவுகிறது.

வாழைப்பழம், தேன் 

இந்த மாஸ்கை தயார் செய்வதற்கு நன்கு பழுத்த 1/2 வாழைப்பழத்தை மசித்து அதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இது சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை வழங்கி அதனை மென்மையாக மாற்றுகிறது.

வாழைப்பழம், தயிர் 

பழுத்த வாழைப்பழம் பாதி அளவு எடுத்து நன்கு மசித்து ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். கண்கள் மற்றும் உதடு பகுதிகளை தவிர்த்து விடவும். 20 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இந்த காம்பினேஷன் உங்களுக்கு மென்மையான மற்றும் மினுமினுப்பான சருமத்தை தரும்.

இதையும் படிக்கலாமே:  நகங்கள் உடைந்து போச்சேன்னு இனி கவலையே வேணாம்… அத ஈசியா சரிசெய்ய செம ஐடியா இருக்கு!!!

வாழைப்பழம், அவகாடோ, ஆலிவ் எண்ணெய் 

1/2 வாழைப்பழத்தை மசித்து அதனோடு பழுத்த பாதி அளவு அவகாடோ பழத்தையும், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயையும் கலந்து ஒரு ஃபேஸ் மாஸ்கை தயார் செய்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும்.

வாழைப்பழம், ஓட்ஸ் 

இந்த எக்ஸ்ஃபாலியேட்டிங் ஃபேஸ் மாஸ்க்கை தயார் செய்வதற்கு 1/2 பழுத்த வாழைப்பழத்தோடு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பொடியாக அரைத்த ஓட்மீலை கலக்கவும். இதனை முகத்தில் தடவி வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக்கொள்ளலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
  • Leave a Reply