வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளைப் போலவே பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கு இருக்கும். சமையல் பயன்பாடுகளை தவிர உருளைக்கிழங்கில் சருமத்திற்கு நன்மை தரும் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளது. எனவே இதனை உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் தாராளமாக பயன்படுத்தலாம். வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உருளைக்கிழங்கு சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி அதனை பாதுகாக்கிறது. இதில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைத்து, எரிச்சல் கொண்ட தோலை ஆற்றுகிறது. மேலும் இதில் உள்ள பிளீச்சிங் பண்புகள் சருமத்தில் உள்ள கறைகளைப் போக்குகிறது. ஆகவே உருளைக்கிழங்கை நம்முடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பதற்கான சில வழிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஹைபர் பிக்மென்டேஷனை குறைப்பதற்கு
உருளைக்கிழங்கு சாறு கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்ட்டேஷனை மங்க வைக்கும் தன்மை கொண்டது. இதற்கு வெறுமனே உருளைக்கிழங்கை சீவி அதில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு காட்டனை எடுத்து உருளைக்கிழங்கு சாற்றில் முக்கிய பிக்மென்டேஷன் இருக்கும் பகுதிகளில் தடவவும். ஒரு சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
கருவளையம்
உருளைக்கிழங்கை வட்ட வடிவில் நறுக்கி அதனை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிரூட்டி பின்னர் உங்களுடைய கண்களை மூடி அதன் மீது வைத்து 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். இதன் குளிரூட்டும் பண்புகள் ரத்த நாளங்களை சுருங்க செய்து, வீக்கத்தை போக்கி, கருவளையத்தை குறைக்கும்.
முகப்பரு சிகிச்சை
வீட்டிலேயே முகப்பருவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நீங்கள் உருளைக்கிழங்கு சாற்றுடன் தேனை கலந்து பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் மாஸ்க்கை உங்களுடைய முகத்தில் சமமாக தடவவும். அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக கவனம் செலுத்தவும். ஒரு சில நிமிடங்கள் ஊற வைத்து விட்டு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளவும்.
இதையும் படிக்கலாமே: கருப்பு கேரட் கண்ணுல பட்டா எப்பாடுபட்டாவது அத வாங்கிடுங்க… இல்லன்னா வருத்தப்படுவீங்க!!!
சன்பர்ன்
உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி அதனை ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் முகத்தில் சன்பர்னால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வையுங்கள். இது வெப்பத்தை குறைத்து, அசௌகரியத்தை போக்கி சிவத்தலை குறைக்கும்.
தோலை இறுக்குவதற்கு
உங்களுடைய தோலை இறுக்கி, வயதான அறிகுறிகளை குறைத்து, முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பை தடுப்பதற்கு உருளைக்கிழங்கு சாற்றுடன் முட்டையின் வெள்ளை கரு கலந்து பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அது காயும் வரை காத்திருக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க் சரும துளைகளை இறுக்கி உங்களுக்கு இளமையான தோற்றத்தை தரும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.