நோய் எதிர்ப்பு சக்தியை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் அக்னி டீ!!!
Author: Hemalatha Ramkumar3 June 2023, 4:12 pm
தற்போது கோடை காலம் நடைபெற்று வருவதால் அதற்கு ஏற்றவாறு உணவுகளில் மாற்றம் செய்வது அவசியம். அதிகப்படியான வெப்பத்தை சமாளிக்க கூடிய உணவுகளை உண்பதன் மூலமாக நமது ஆரோக்கியத்தை நாம் பராமரித்துக் கொள்ளலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது மற்றும் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிடுவது போன்றவை கோடை காலத்தில் நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஒரு கோடைகால பானம் தான் அக்னி தேநீர். இந்த அக்னி தேநீர் ஒருவரது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். இது ஒரு எடை இழப்பு பானம் அல்ல. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமானத்தை மீட்டெடுக்க உதவும் ஒரு டீடாக்ஸ் பானம் ஆகும்.
இந்த தேநீர் செய்வதற்கு நமக்கு ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு சிட்டிகை மிளகு தூள், அரை இன்ச் அளவு இஞ்சி, ஒரு டீஸ்பூன் கல் உப்பு, இரண்டு டீஸ்பூன் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு தேவைப்படும். இப்போது இந்த தேநீர் செய்வதற்கு ஒரு சாஸ் பேனை அடுப்பில் வைத்து எலுமிச்சை சாறு தவிர பிற அனைத்து பொருட்களையும் அந்த பேனில் சேர்த்து 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பின்னர் ஒரு சில நிமிடங்கள் ஆர வைத்து எடுத்துக் கொள்ளலாம். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து வெதுவெதுப்பான பதத்தில் இதனை பருக வேண்டும். இந்த கோடைகால பானம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்குகிறது. இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.