நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் டிரை ஃப்ரூட்ஸ் மில்க்!!!

Author: Hemalatha Ramkumar
24 January 2023, 1:10 pm

குளிர்காலத்தில், உடலை சூடாக வைத்திருக்கும் உணவுகளை உணவில் சேர்த்து சாப்பிட விரும்புகிறோம். வெப்பநிலை குறைவதால், தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களின் நுகர்வு கணிசமாக அதிகரிக்கிறது. இவற்றுக்குப் பதிலாக, நீங்கள் உலர்ந்த பழ பால் (Dry fruits milk) சாப்பிட்டு பார்க்கலாம். இதை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலமாக, உங்களை உடலை சூடாகவும், சுறுசுறுப்பாகவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம். இந்த சுவையான பாலை காலையிலோ அல்லது இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாகவோ உட்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பானத்தை அனுபவிக்கலாம்.

இந்த பானத்தை தயாரிக்க, நீங்கள் பின்வரும் பொருட்களை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்
– 2 பேரீச்சம்பழங்கள்
2 உலர்ந்த அத்திப்பழம்
6 பாதாம், 4 அக்ரூட் பருப்புகள்
2 டீஸ்பூன் எள்
4-5 இழைகள் குங்குமப்பூ.

காலையில், ஊற வைத்த பாதாமின் தோலை உரித்து, பேரீச்சம்பழத்தில் இருந்து விதைகளை அகற்றவும். அடுத்து, எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். இதனோடு 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். இப்போது இந்த பேஸ்டில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து அதனை 1 கப் சூடான பாலுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

உலர்ந்த பழங்கள் கொண்டு செய்யப்படும் பாலின் நன்மைகள் பின்வருமாறு:-

*ஆற்றலை அதிகரிக்கும்
பளபளப்பான மற்றும்

*பொலிவான சருமத்தை பெற உதவுகிறது

*நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

*உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

*இந்த பால் குளிர்கால நோய்களுக்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.

*பாலில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

*இது உங்கள் முடி, நகங்கள் மற்றும் தோலுக்கு தேவையான நல்ல புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

இந்த உலர்ந்த பழம் பால் சாப்பிட சிறந்த நேரம் காலை ஆகும். காலையில் குடிக்க முடியாதவர்கள் இரவில் உறங்கும் முன் குடிக்கலாம்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 498

    0

    0