நேரம் காலம் பாராமல் அடிக்கடி கிரீன் டீ குடிப்பவர்கள் கவனத்திற்கு!!!

Author: Hemalatha Ramkumar
7 January 2025, 5:11 pm

கோவிட்-19 தொற்றுக்கு பிறகு பலர் தங்களுடைய ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் கிரீன் டீ என்பது அனைத்து வயதினரிடையே அதிக பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இது நம்முடைய டயட்டிற்கு சிறந்த ஒரு கூடுதலாக அமைகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த கிரீன் டீ குடிப்பதால் ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த பதிவில் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் ஆகிய இரண்டைப் பற்றியும் பார்க்கலாம்.

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் 

இதய ஆரோக்கியம்

வழக்கமான முறையில் கிரீன் டீ குடிப்பது நம்மை இதய நோய்களிடமிருந்து பாதுகாப்பாக வைக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதங்கள் ஏற்படுவது குறைகிறது. மேலும் கிரீன் டீ கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. கிரீன் டீயில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் ரத்த நாளங்களை ஓய்வடைய செய்து வீக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

மூளையின் ஆரோக்கியம் 

கிரீன் டீயின் தனித்துவமான பண்புகள் நம்முடைய மனநலனுக்கு ஊக்கமாக அமைகிறது. இதில் உள்ள காஃபைன் மனதை தூண்டி, மனநிலையை மேம்படுத்தி, ஆற்றலை அதிகரித்து, ஞாபக சக்தியை மேம்படுத்துகிறது. கிரீன் டீயில் காணப்படும் L-தியானைன் என்ற அமினோ அமிலம் மனதிற்கு ஓய்வு அளித்து, மன அழுத்தத்தை குறைத்து, டோபமைன் மற்றும் செரடோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க 

கிரீன் டீயில் காணப்படும் கேட்டசின்கள் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்பு எரிக்கும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது. இதனால் இது உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.

இதையும் படிச்சு பாருங்க: கர்ப்பமா இருக்கீங்களா… நார்மல் டெலிவரியாக இந்த டிப்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!!!

கிரீன் டீ பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் 

கிரீன் டீ என்ன தான் ஒரு பிரபலமான பானமாக இருந்தாலும், இதனை மிதமான அளவில் அதாவது ஒரு நாளைக்கு தோராயமாக 8 கப்களுக்கு மேல் பருகுவதை தவிர்த்து விடுங்கள். அளவுக்கு அதிகமாக கிரீன் டீ குடிப்பது அதில் உள்ள அதிக காஃபையின் அளவுகள் காரணமாக தலைவலி போன்ற லேசான விளைவுகள் முதல் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான பக்க விளைவுகள் வரை ஏற்படுத்தலாம். மேலும் தினமும் அதிக அளவில் கிரீன் டீ குடிப்பது நாளடைவில் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Honey Rose Complaint Chemmanur Owner Bobby Arrest பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… பதுங்கிய பிரபல தொழிலதிபர் கைது!
  • Views: - 60

    0

    0

    Leave a Reply