நைட்ல வாழைப்பழம் சாப்பிடுறது அவ்வளோ பெரிய தப்பா என்ன…???

Author: Hemalatha Ramkumar
11 January 2025, 3:56 pm

நம்மில் பலருக்கு இரவு தூங்குவதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த தீங்கில்லாத தின்பண்டம் நம்முடைய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பலன்களை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பதிவில் இரவு நேரங்களில் வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அது சம்பந்தமான சில கட்டுக் கதைகள் பற்றியும் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

இரவு நேரத்தில் வாழைப் பழங்களை சாப்பிடுவது வாழைப்பழத்தின் இனிப்பு சுவை மற்றும் எளிதாக கிடைக்கும் தன்மை காரணமாகவும், ஊட்டச்சத்துக்கள் காரணமாகவும் இது பலருடைய விருப்பமான பழமாக அமைகிறது. இரவு நேரத்தில் வாழைப்பழங்கள் சாப்பிடுவது என்று வரும் பொழுது பலர் இது சம்பந்தமான தங்களுடைய வெவ்வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றனர். இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கு வாழைப்பழங்கள் ஒரு சிறந்த தின்பண்டம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இரவு நேரத்தில் வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகள் உண்டாகும் என்று இன்னும் சிலர் கூறுகின்றனர். எனவே இரவு நேரத்தில் வாழைப்பழங்கள் சாப்பிடுவது சம்பந்தமான கட்டுக் கதைகளையும், உண்மை பற்றியும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வாழைப்பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் செரிமானம்

வாழைப்பழங்களில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் இது வாயு தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிடும் பொழுது இந்த பிரச்சனைகள் மோசமாகும்.

ரத்த சர்க்கரை அளவுகள்

வாழைப்பழங்களில் இயற்கையான சர்க்கரை அதிக அளவில் காணப்படுவதால் இதனை வேறு எந்த ஒரு உணவோடும் இல்லாமல் தனியாக சாப்பிடும் பொழுது நம்முடைய ரத்த சர்க்கரை அளவுகள் தாறுமாறாக அதிகரிக்கலாம்.

உடல் எடை கட்டுப்பாடு

கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிறைந்த வாழைப்பழங்கள் நமக்கு சிறந்த ஆற்றல் மூலமாக அமைகின்றது. ஆனால் நீங்கள் உடல் ரீதியாக ஆக்டிவாக இல்லாவிட்டால் உங்களுடைய ஆற்றல் அனைத்தும் கொழுப்பாக சேமிக்கப்பட்டு, அது உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பூசணி விதை எண்ணெய் எண்ணெய் இருக்க பயம் ஏன்… சொட்டையே விழுந்தாலும் கவலையில்ல!!!

இரவு நேரத்தில் வாழைப்பழங்கள் சாப்பிடுவது சம்பந்தமான கட்டுக் கதைகள் 

இரவில் வாழைப்பழங்கள் சாப்பிடுவது டயபடீஸ் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கலாம்:

உண்மையில் வாழைப்பழங்களில் உள்ள நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸை மெதுவாக்குகிறது.

வாழைப்பழங்கள் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்:

இது முழுக்க முழுக்க நீங்கள் சாப்பிடும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை மற்றும் நேரத்தை பொறுத்து அமையும்.

இரவு நேரத்தில் வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

இரவில் திடீரென்று பசி ஏற்படும் பொழுது ஆரோக்கியமற்ற கொழுப்பு அல்லது செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட தின்பண்டங்களுக்கு பதிலாக வாழைப்பழங்கள் சாப்பிடுவது ஒரு ஆரோக்கியமான ஆப்ஷனாக இருக்கிறது. வாழைப்பழம் சாப்பிடுவது அதில் உள்ள மெக்னீசியம் மற்றும் டிரிப்டோஃபேன் அளவு காரணமாக தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி உடலுக்கு ஓய்வு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Bigg Boss Tamil Season 8 This Week Double Eviction யாருமே எதிர்பார்க்காத எலிமினேஷன்… பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளிப்பு : கடும் எதிர்ப்பு!
  • Leave a Reply