பலர் பொலிவான சருமத்திற்கும், அடர்த்தியான தலைமுடிக்கும் விலை உயர்ந்த சரும பராமரிப்பு பொருட்களையும், பியூட்டி பார்லர் சிகிச்சைகளையும் நாடுகின்றனர். ஆனால் உண்மையில் நம்முடைய உடலுக்கு நாம் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து விட்டாலே மினுமினப்பான சருமத்தையும், அடர்த்தியான தலைமுடியையும் பெறலாம். அந்த வகையில் பார்க்கும் பொழுது வைட்டமின் E என்ற அத்தியாவசிய ஆன்டி-ஆக்சிடன்ட் உங்களுடைய சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு உதவுகிறது.
வைட்டமின் E கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஈரப்பத இழப்பை தடுப்பதன் மூலமாக இளமையான தோற்றத்தை அளித்து, வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை தருகிறது. போதுமான அளவு வைட்டமின் E ஊட்டச்சத்தை அன்றாட உணவில் எடுத்துக் கொள்வது உங்களுடைய தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உங்களுடைய அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய வைட்டமின் E நிறைந்த சில சூப்பர்ஃபுட்டுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வைட்டமின் E நிறைந்த சூப்பர் ஃபுட்டுகள்
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் வைட்டமின் E காணப்படுகிறது. இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, சுருக்கங்களை போக்கி, அதனை தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மயிர் கால்களை வலுவாக்கி தலைமுடி உதிர்வு ஏற்படுவதை குறைக்கிறது.
கீரை
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த கீரை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து பாதுகாத்து சருமத்திற்கு சேதம் ஏற்படுவதையும் வயதான அறிகுறிகளையும் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் கீரையில் உள்ள வைட்டமின் E சருமத்தின் இயற்கை பாதுகாப்பு தடையை வலுப்படுத்தி, ஈரப்பதத்தை தக்க வைத்து, பொலிவான சருமத்தை வழங்குகிறது.
இதையும் படிச்சு பாருங்க: குளிர்கால நோய்களை விரட்ட காலை வெறும் வயிற்றில் முருங்கை கீரை…!!!
அவகாடோ பழங்கள்
வைட்டமின் E மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த அவகாடோ பழங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை லாக் செய்து, சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை நீக்குகிறது. மேலும் அவகாடோ பழத்தில் உள்ள வைட்டமின் E சருமத்தை சுற்றுச்சூழல் மாசுபாடுகளில் இருந்து பாதுகாத்து இளமையான மற்றும் பொலிவான தோற்றத்தை அளிக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடிக்கு சிறந்த ஒரு உணவாக அமைகிறது. பெரும்பாலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு அதில் உள்ள பீட்டா கரோட்டினுகாக அறியப்படுகிறது. எனினும் இது வைட்டமின் E ஊட்டச்சத்தின் ஒரு அற்புதமான மூலமாகவும் அமைகிறது.
சூரியகாந்தி விதைகள்
28 கிராம் சூரியகாந்தி விதைகளில் தோராயமாக 7 மில்லி கிராம் வைட்டமின் E காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் E ஊட்டச்சத்து ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாத்து அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி வயதாகும் செயல் முறையை தாமதப்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.