மண் பாத்திர சமையல்: இந்த ஒரு விஷயத்த மாற்றினா போதும்… ஆரோக்கியம் உங்கள் கையில்!!!
Author: Hemalatha Ramkumar2 November 2024, 6:40 pm
இன்று நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் பல கலப்படங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உணவானது தண்ணீர் மற்றும் காற்றினால் நேரடியாக பாதிக்கப்படுகிறது. ஆனால் உணவு பற்றி பேசும் பொழுது ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் நிச்சயமாக யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய முன்னோர்கள் அதாவது நம் தாத்தா பாட்டிகள் 80, 90, ஏன் 100 வயது வரையிலும் கூட ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஏனெனில் அவர்கள் சுத்தமான உணவு மற்றும் தண்ணீரை சாப்பிட்டு வந்தனர். எனவே இயற்கை சார்ந்த உணவுகளை நம்முடைய அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மண் பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் நாம் என்ன சாப்பிடுகிறோம் மற்றும் எந்த நேரத்திற்கு சாப்பிடுகிறோம் என்பது போன்ற உணவு உண்ணும் பழக்க வழக்கங்கள் மட்டுமல்லாமல் உணவை சமைக்கும் பாத்திரங்களும் நம்முடைய ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த காலத்தில் உணவுகளை சமைப்பதற்கு நம்முடைய முன்னோர்கள் மண் பாண்டங்களை பயன்படுத்தி வந்தனர்.
மண் பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தி, நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவும். இந்த முக்கியத்துவத்தை உணர்ந்த பலர் இன்று மண் பாத்திரங்களில் சமைப்பதற்கு ஆரம்பித்துள்ளனர். பல்வேறு வகையான மண்பாத்திரங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அவை 150 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலான விலையில் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: காலை உணவை சாப்பிட சிறந்த நேரம் ஏதேனும் உள்ளதா???
அலுமினிய பாத்திரங்களால் ஏற்படும் நோய்கள்
மண் பாத்திரங்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவு நம்முடைய ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துகிறதோ அதைப்போல ஸ்டீல் மற்றும் அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. மண் பாத்திரங்களில் சமைத்த உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக நம்முடைய உடலுக்கு கிடைக்கிறது. இதுவே பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் பயன்பாடு பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே நம்முடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும் பொழுது என்னதான் தற்போது புதிது புதிதாக பாத்திரங்கள், பேன்சியாகவும் டிசைன் டிசைனாகவும் கிடைத்தாலும் நம்முடைய பாரம்பரியமான மண் பாத்திரங்களில் சமைப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.