டயாபடீஸ் பிரச்சனைக்கு இவ்வளவு சிம்பிளா ஒரு தீர்வு இருக்கும்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
6 December 2024, 6:45 pm

ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் கட்டாயமாக பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை ஆயுர்வேதத்தில் ஒரு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நிபுணர்களின் கருத்துப்படி, கறிவேப்பிலை இதய பிரச்சினைகளுக்கு உதவுவது தவிர, இது டயாபடீஸ் பிரச்சனைக்கும் அற்புதமான ஒரு தீர்வாக அமைகிறது. வழக்கமான முறையில் கறிவேப்பிலை சாப்பிடுவது உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி, வீக்கத்தை குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

வைட்டமின்கள் A, B, C மற்றும் E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம்முடைய உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.

கறிவேப்பிலை எப்படி ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்? 

கறிவேப்பிலையில் காணப்படும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குகிறது. மேலும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் சேதத்தை தடுக்கின்றது. இது குறிப்பாக வகை 2 டயாபடீஸில் முக்கிய பிரச்சனை ஆக அமைகிறது. 

கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை மெதுவாக்கி, மெட்டபாலிசம் பொறுமையாக நடைபெறுவதை உறுதி செய்வதன் மூலமாக ரத்த சர்க்கரை அளவுகள் பராமரிக்கப்படுகிறது. மேலும் கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, நம்முடைய உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்துவதை கவனித்து கொள்கிறது. 

குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் நுழையும் அளவை கறிவேப்பிலை கட்டுப்படுத்துகிறது. மேலும் மாவுச்சத்து குளுக்கோஸ் ஆக உடைக்கப்படும் விகிதத்தையும் கறிவேப்பிலை மெதுவாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிச்சு பாருங்க: காஸ்ட்லி ப்ராடக்டுகளும் வேண்டாம், பியூட்டி பார்லரும் தேவையில்லை… ஜொலிக்கும் சருமம், அடர்த்தியான தலைமுடி… இது இரண்டுக்குமே ஒரே தீர்வு இதோ!!!

டயாபடீஸ் பிரச்சனை இருப்பவர்கள் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்?

*காலை எழுந்ததும் முதல் வேலையாக 10 கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இது ஆரம்பத்தில் சற்று கசப்பான சுவை கொண்டு இருந்தாலும் இந்த இலைகள் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவுகளில் நீண்ட நேரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

*ஒரு கொத்து கறிவேப்பிலை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஜூஸாக அரைத்து காலையில் பருகலாம்.

*இது தவிர கருவேப்பிலையை சமைக்கும் போது பயன்படுத்தலாம். மேலும் சாலட்டுகளிலும் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலையின் பிற நன்மைகள் 

*செரிமானத்தை மேம்படுத்துகிறது

*கொலஸ்ட்ராலை குறைத்து பிளேக் உருவாவதை தடுப்பதன் மூலமாக இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. 

*கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 

*தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, இளநரையை போக்குகிறது. 

*முகப்பரு, முகத்தில் உள்ள கறைகள் மற்றும் மெல்லிய கோடுகளை குறைக்கிறது. 

*வைட்டமின் A அதிகமாக இருப்பதால் பார்வை திறனை அதிகரிக்கிறது. 

*மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்து, மனதில் அமைதியூட்டும் விளைவை ஏற்படுத்துகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!