புஜங்காசனம்: ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கினா போதும்… முதுகு வலி, மாதவிடாய் வலி, டென்ஷன் எல்லாமே பறந்து போய்டும்!!!
Author: Hemalatha Ramkumar20 September 2024, 10:43 am
கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படும் புஜங்காசனம் என்பது கோப்ரா தனது தலையை தூக்கி இருப்பது போல அமைந்திருக்கும் ஒரு யோகாசன பயிற்சி ஆகும். இது சூரிய நமஸ்காரத்தில் தொடர்ச்சியாக வரக்கூடிய ஒரு பகுதி. இதனை வழக்கமான முறையில் செய்து வந்தால் நிச்சயமாக பல்வேறு பலன்கள் உண்டு.
முதுகுத்தண்டை வலுப்படுத்துகிறது
தோரணை மற்றும் முதுகு தண்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமாக புஜங்காசனம் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மற்றும் முதுகு தண்டிற்கு வலு சேர்க்கிறது.
முதுகு வலியில் இருந்து நிவாரணம்
இந்த யோகா நிலையானது முதுகு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதிலும் குறிப்பாக நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இந்த யோகாசனத்தை செய்து வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது
தொடர்ச்சியாக இந்த யோகசனத்தை பயிற்சி செய்து வந்தால் முதுகுத்தண்டு அதிக நெகிழ்தன்மை பெற்று நெஞ்சு பகுதி, தோள்பட்டை மற்றும் அடிவயிற்றில் உள்ள தசைகள் திறக்கிறது.
நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கிறது
ஆழமான சுவாசத்திற்கு நெஞ்சு பகுதியை விரிவடைய செய்து, நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்கிறது. இவை இரண்டுமே சுவாச ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.
அடி வயிற்றில் உள்ள உறுப்புகளை தூண்டுகிறது
அடி வயிற்றில் உள்ள உறுப்புகளை பொறுமையாக மசாஜ் செய்வதன் மூலமாக இது பசி மற்றும் செரிமானத்தை தூண்டுகிறது.
டென்ஷனை குறைக்கிறது
அட்ரினல் சுரப்பிகளை ஆக்டிவேட் செய்து ஓய்வை ஊக்குவிப்பதன் மூலமாக புஜங்காசனம் நம்முடைய டென்ஷனை குறைக்கிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
இந்த தோரணை உடல் முழுவதும் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
மாதவிடாய் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம்
இந்த யோகா யோகாசனத்தை அடிக்கடி செய்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அசௌகரியத்தில் இருந்து விடுபடலாம்.
மனநிலையை மேம்படுத்துகிறது
உடல் மற்றும் மனதளவில் உள்ள அழுத்தத்தை போக்கி மனநலனை மேம்படுத்தி ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு பங்களிக்கிறது.
பிசியான வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் எவராலும் முக்கியத்துவம் கொடுக்க முடிவதில்லை. ஆனால் ஒரு சில நிமிடங்கள் செலவு செய்து இந்த யோகா பயிற்சியை செய்து வந்தாலே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.