கர்ப்பகால சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவும் பாத மசாஜ்!!!

Author: Hemalatha Ramkumar
26 November 2024, 11:11 am

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான, முக்கியமான மற்றும் அதே நேரத்தில் பல சவால்களை தரக்கூடிய ஒரு தருணம். காலையில் ஏற்படும் குமட்டல் முதல் சோர்வு மற்றும் பாத வலி வரை கர்ப்ப காலத்தில் ஒரு பெண் பல பிரச்சனைகளை அனுபவிக்கிறாள். மனநிலை மாற்றத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பாத வலியை நிச்சயமாக ஆயில் மசாஜ் செய்து உங்களால் திறமையாக சமாளிக்க முடியும். ஒரு பெண்ணின் உடல் கர்ப்ப காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதிக ரத்த ஓட்டம் முதல் தரமான தூக்கம் வரை தூங்குவதற்கு முன்பு பாதங்களில் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வதால் கர்ப்பிணி பெண்களுக்கு பல விதங்களில் நன்மை ஏற்படுகிறது. ஆகவே இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் தூங்குவதற்கு முன்பு பாதத்தில் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

சருமத்தை மென்மையாக்கி, போஷாக்கு வழங்குகிறது 

கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் வறண்ட மற்றும் உணர்திறன் கொண்ட சருமத்தால் அவதிப்படுவார்கள். இது அவர்களுடைய சௌகரியத்தை பாதிக்கும். எனினும் பாதங்களுக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குவது மட்டுமல்லாமல் அதற்கு அவசியமான போஷாக்கை கொடுத்து, பாத வெடிப்புகள் ஏற்படுவதை குறைக்கும். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட பரிந்துரை செய்யப்படுகிறது. 

அதிக ரத்த ஓட்டம் 

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் கர்ப்பப்பையின் காரணமாக ரத்த ஓட்டம் குறையலாம். இதனால் கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் அல்லது கனமான உணர்வு ஏற்படும். இது போன்ற நிலையில் நல்லெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை லேசாக சூடு செய்து அது வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து வீக்கத்தால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கும். 

இதையும் படிக்கலாமே: இந்த ஹேக்ஸ் ஃபாலோ பண்ணா வெறும் 5 நிமிடங்களில் வீட்டை சுத்தம் செய்து விடலாம்!!!

மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும் 

கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் மன அழுத்தம், பதட்டம் மற்றும் சீர்குளிக்கப்பட்ட தூக்க அட்டவணையால் அவதிப்படுவார்கள். வழக்கமான முறையில் எண்ணெய் மசாஜ் செய்வது அழுத்த புள்ளிகளை தூண்டி, நரம்பு அமைப்புக்கு ஓய்வு கொடுத்து, மன அழுத்தத்தை குறைத்து, ஆழமான மற்றும் தரமான தூக்கத்தை ஊக்குவிக்கும். 

வலியை குறைக்கிறது 

உடல் எடை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கால்கள் மற்றும் பாதங்களில் வலி ஏற்படுவது கர்ப்பிணி பெண்கள் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் இதனை உங்களால் நிச்சயமாக சமாளிக்க முடியும். கால்களை வெதுவெதுப்பான எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது தசைகளில் உள்ள வலியை போக்கி உங்களுக்கு ரிலாக்ஸான உணர்வை கொடுக்கும். 

ஹார்மோன்கள் சமநிலை 

மனித உடலில் குறிப்பிட்ட சில அழுத்த புள்ளிகள் நம்முடைய எண்டோகிரின் அமைப்பில் உள்ள சுரப்பிகளோடு நேரடி தொடர்பை கொண்டுள்ளன. இவை ஹார்மோன் உற்பத்தி மற்றும் சீரமைப்புக்கு காரணமானவை. அந்த புள்ளிகளை பொறுமையாக மசாஜ் செய்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன்கள் மற்றும் எண்டார்பின்களை வெளியிடுகிறது. எனவே தூங்குவதற்கு முன்பு எண்ணெய் மசாஜ் செய்வது கர்ப்பிணி பெண்களுக்கு அசௌகரியத்தை போக்கி நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Suriya Bike Ride with Actress Photos Viral சூர்யாவுடன் பைக்கில் சுற்றும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் VIDEO!
  • Views: - 56

    0

    0

    Leave a Reply