உணவுக்கு பிறகு இந்த தண்ணீர் ஒரு கிளாஸ் குடிச்சாலே செரிமானம் பிரமாதமா நடக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
18 January 2025, 11:37 am

குளிர்காலத்தில் உணவு சாப்பிட்ட பிறகு ஓம தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரித்து நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். இந்த இயற்கை தீர்வு அஜீரணம், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் அளவுகள் ஆகியவற்றிற்கு உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றி ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் உணவுக்குப் பிறகு ஓமத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நம்ப முடியாத பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

செரிமானம் 

ஓமத்தண்ணீர் என்பது இயற்கையான செரிமான தூண்டியாக அமைந்து, வயிற்றை அமைதிப்படுத்தி, அசிடிட்டியை குறைத்து வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடை 

ஓமத்தண்ணீர் என்பது நம்முடைய மெட்டபாலிசத்தை அதிகரிப்பதற்கான பயன்களை கொண்டுள்ளது. ஓமம் விதைகளில் காணப்படும் தைமால் என்ற முக்கியமான பொருள் வயிற்றில் உள்ள சாறுகளை அதிகரித்து, செரிமானத்தை விரைவுப்படுத்தி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.

உடலை சுத்தம் செய்கிறது

உணவு சாப்பிட்ட பிறகு ஓம தண்ணீர் குடிப்பது நம்முடைய உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறைக்கு உதவுகிறது. இதனால் செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது.

இதையும் படிக்கலாமே: டயாபடீஸ் இருக்கவங்க இனி கவலைபட தேவையில்லை… நிரந்தர தீர்வு கண்டுபுடிச்சாச்சு!!!

சளி 

உணவு சாப்பிட்ட பிறகு ஓம தண்ணீர் குடித்தால் சுவாச பாதையில் உள்ள சளி தளர்த்தப்பட்டு, தொண்டையில் உள்ள வீக்கம் குறையும். மேலும் நெஞ்சு பகுதியில் உள்ள சளி வெளியேறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

உணவுக்குப் பிறகு ஓமத் தண்ணீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான சில உடல்நல பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். ஓம விதைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது நம்முடைய உடலை தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!