ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும் திராட்சை சாறு…!!!
Author: Hemalatha Ramkumar4 January 2025, 3:40 pm
தற்போது நாம் குளிர்காலத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளின் முடிவிலும் குளிர் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனினும் இந்த குளிரான நாட்களில் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தினமும் திராட்சை சாறு குடிப்பது உதவக்கூடும். திராட்சையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிலும் குறிப்பாக ரெஸ்வெராட்ரால் மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. கூடுதலாக திராட்சை சாற்றில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இருப்பதால் குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை எதிர்த்து சமாளிப்பதற்கு இது உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் திராட்சை சாற்றில் இதய ஆரோக்கியம், நல்ல ரத்த ஓட்டம் மற்றும் வீக்கத்தை குறைக்கும் பண்புகளும் காணப்படுகிறது.
திராட்சை சாறு என்பது சர்க்கரையின் இயற்கையான மூலமாக அமைவதால் இது நம்முடைய உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள நீரேற்றும் பண்புகள் குளிர்காலத்தில் நம்முடைய சருமத்தை பொலிவாக வைப்பதற்கு உதவுகிறது. தினமும் திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நம்ப முடியாத பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான எலும்புகள்
வைட்டமின்கள் B, C மற்றும் K, மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் திராட்சை சாற்றில் அதிக அளவில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனைகள் அதிலும் குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுப்பதற்கு உதவுகின்றன.
ஆரோக்கியமான தலைமுடி
திராட்சை சாற்றில் வைட்டமின் E மற்றும் லினோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தலைமுடி மெலிந்து போதல் தலைமுடி உதிர்வு மற்றும் தலைமுடி சோர்வாக காணப்படுவது போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
ஆற்றல் ஊக்கி
குளிர்காலத்தில் தினமும் கிரேப் ஜூஸ் குடிப்பதால் நம்முடைய உடலுக்கு இயற்கையான முறையில் ஆற்றல் கிடைக்கிறது. இது நம்முடைய உடல் செயல்பாட்டை அதிகப்படுத்தி, ஆன்டி-ஆக்சிடன்ட் பாதுகாப்பை வழங்கி வீக்க எதிர்ப்பு பண்புகளையும் கொடுக்கிறது.
இதையும் படிக்கலாமே: கற்றாழை இயற்கை பொருளா இருந்தாலும் அதனாலையும் பக்க விளைவுகள் வரலாம்… என்னன்னு தெரிஞ்சுக்கலாம்!!!
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
இறுதியாக கிரேப் ஜூஸில் அந்தோசயானின்கள், கேட்டசின்கள், ரெஸ்வெராடிரால் மற்றும் எபிகேட்டசின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடவும், நோய்களைத் தடுக்கவும், புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.