பலவீனமான எலும்புகளை உப்பு நீர் குணமாக்கும்னு சொன்னா நம்புவீங்களா…???

Author: Hemalatha Ramkumar
19 September 2022, 12:47 pm

இன்று பலர் பலவீனமான எலும்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நீங்கள் இந்தப் பிரச்சனையால் அவதிப்படுவதைக் காணலாம். இதற்கு பல்வேறு மருந்துகளை நாம் எடுத்துக்கொள்கிறோம் மற்றும் இது தீவிரமாகும் நிலையில் கூடுதலாக அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கிறோம். இருப்பினும், உப்பைப் பயன்படுத்தி உங்கள் எலும்புகளை வலுப்படுத்தலாம்.

நாம் அனைவரும் உண்ணும் உணவில் உப்பு சேர்த்து சாப்பிடுகிறோம். இதைத் தவிர்த்து தண்ணீர் குடிக்கும்போது அதில் சிறிதளவு உப்பு பயன்படுத்த வேண்டும். உப்பு நீர் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இன்று உப்பு நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம். தினமும் காலையில் உப்பு நீரை உட்கொண்டால், பல நோய்களை நீங்கள் எளிதாக தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

* உப்பு நீர் செரிமானத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆம், குறிப்பாக, நீங்கள் தண்ணீரில் கருப்பு உப்பைச் சேர்த்தால், அது செரிமானத்தை எளிதாக்க உங்களுக்குள் உணவை ஜீரணிக்கும் நொதியைத் தூண்டுகிறது.

* உப்பு நீரை உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும் என்பது வெகு சிலருக்கே தெரியும். உண்மையில், இதில் கால்சியம் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

* உங்களின் தூக்கத்திலும் உப்பு நீர் சாதகமான விளைவைக் கொண்டுள்ளது. உண்மையில், உப்பில் காணப்படும் தாதுக்கள் உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகின்றன. இது இரவில் நாம் நன்றாக தூங்க உதவுகிறது.

*ஆனால் இதனை எப்படி, எந்த அளவில் பருக வேண்டும் என்பதை மருத்துவர் ஆலோசனை பெற்ற பிறகே செய்ய வேண்டும்.

  • Director Ameer connection to drug case இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!