நம்முடைய ஆரோக்கியமான அன்றாட வழக்கத்தின் மிகவும் எளிமையான அதே நேரத்தில் முக்கியமான ஒன்றாக அமைவது தண்ணீர் குடித்தல். உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது முதல் குடல் இயக்கங்களை சீராக்குவது வரை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2 லிட்டர் தண்ணீரும், கர்ப்பிணி பெண்கள் 2.5 லிட்டர் வரை தண்ணீரும் பருகுவது அவசியம் என்று இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிசன் கூறுகிறது. நமது உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அவசியம். ஏனெனில் நமது உடலில் பெரும்பாலான செயல்பாடுகள் திறம்பட நடைபெறுவதற்கும், பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளில் இருந்து பாதுகாப்பதற்கும் தண்ணீர் அவசியமானதாக கருதப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு போராடி வருகிறீர்கள் என்றாலோ அல்லது தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தாலோ தண்ணீர் குடிப்பது பல நன்மைகளை அளிக்கும். அந்த வகையில் தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
தண்ணீர் குடிப்பது நல்ல தூக்கம் அட்டவணையை கொண்டிருக்கவும், மனநிலையை மேம்படுத்தவும், அறிவுத்திறன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவுகிறது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் மூளை சிறந்த முறையில் செயல்படுகிறது.
தண்ணீர் நமது உடலில் வெப்பநிலையை சீராக்குகிறது. உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது உடலின் சரியான வெப்பநிலையை பராமரிக்க அவசியம்.
நமது உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து கிடைத்தால் செரிமானம் மற்றும் குடல் இயக்கங்கள் மேம்படுத்தப்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் அகற்றப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், வியர்வை வழியாக வெளியேற்றப்பட்டு அதன் மூலமாக செரிமான ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
நமது உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தண்ணீர் அவசியம். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் மட்டுமே உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் விளைவாக உங்களுடைய உறுப்புகள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்படும்.
தண்ணீர் குடிப்பது உங்களுடைய சரும ஆரோக்கியத்தை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தண்ணீர் குடிப்பதால் உங்களுடைய சருமம் வறண்டு போகாமல், நெகிழ்வுத் தன்மையோடு பளபளப்பான அமைப்பை கொண்டிருக்கும். ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தை பெற நினைப்பவர்கள் கட்டாயமாக போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்எ.
காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிப்பது உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கூடுதல் உடல் எடையை குறைப்பதற்கு உதவும். அதிலும் உங்களுடைய பசியை கட்டுப்படுத்துவதற்கு உணவு சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது பயனுள்ளதாக அமையும்.
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உதவும். தண்ணீரானது மலத்தை மென்மையாக்கி, அது எளிதாக வெளியேறுவதற்கு உதவுகிறது.
மேலும் தண்ணீர் குடிப்பது உணவை குடல் வழியாக எளிதாக நகர்வதற்கும் உதவுகிறது.
போதுமான அளவு நீர்ச்சத்து மயிர்கால்களின் pH அளவை சரியாக பராமரித்து அதன் மூலமாக தலைமுடியின் ஆரோக்கியம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் பொடுகு, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
This website uses cookies.