கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடுவதன் நன்மைகள்!!!

Author: Hemalatha Ramkumar
14 May 2023, 5:29 pm

கர்ப்பம் என்பது பெண்களுக்கு ஒரு முக்கியமான காலகட்டமாகும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் மற்றும் உணவு முறைகளில் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கர்ப்ப காலத்தில் சமச்சீரான உணவு அவசியம். அந்த வகையில் பாகற்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள் பற்றி இப்போது பார்ப்போம்.

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவாகும். இதில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பாகற்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது.

பாகற்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

பாகற்காய் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடுவது முகப்பரு மற்றும் நிறமி போன்ற சரும பிரச்சனைகளை தடுக்க உதவும்.

பாகற்காயில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம். கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தை போதுமான அளவு உட்கொள்வது குழந்தையின் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

பாகற்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க விரும்பும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக அமைகிறது.

இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக பாகற்காய் உள்ளது. குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் எந்த ஒரு உணவை சேர்ப்பதற்கு முன் எப்போதும் தங்கள் மருத்துவர்களை அணுக வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!