சூப்பர்ஃபுட் என்று அறியப்படும் ப்ளூ பெர்ரி பழங்கள் வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் C மற்றும் வைட்டமின் K போன்றவற்றின் இயற்கையான மூலம். மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இது உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு, செரிமானம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது. இத்தனை நன்மைகள் அடங்கிய ப்ளூ பெர்ரி பழங்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான வாழ்கையை மேற்கொள்ளலாம்.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ள ப்ளூ பெர்ரிகள் நமது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக சண்டையிட்டு மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஞாபக சக்தியை தூண்டி, புற்றுநோய் மற்றும் இதயம் நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. ப்ளூ பெர்ரி பழங்கள் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவதால் இது டயாபடீஸ் நோயால் போராடி வருபவர்களுக்கும் ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
குறைந்த கலோரிகள் கொண்ட இந்த ப்ளூ பெர்ரிகளை சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் நீங்கள் கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட மாட்டீர்கள். ஆகவே இதன் மூலமாக ப்ளூ பெர்ரி பழங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இப்பொழுது ப்ளூபெர்ரி சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த செரிமானம்
நார்ச்சத்து நிறைந்த ப்ளூ பெர்ரி பழங்கள் உங்களுடைய செரிமான அமைப்பை எந்த ஒரு தங்கு தடையும் இல்லாமல் இயங்குவதற்கு உதவி புரிகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
ரத்த சர்க்கரை கட்டுப்பாடு
ஒருவேளை நீங்கள் ஒரு டயாபட்டிக் நோயாளி என்றால் ப்ளூ பெர்ரி பழங்களை சாப்பிடுவதன் மூலமாக உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமில்லாமல் இது வகை 2 நீரழிவு நோயாளிகளுக்கு பெருந்தொல்லையாக இருக்கும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
அதிக ஆன்டி-ஆக்சிடன்ட் அளவுகள்
இயற்கையான முறையில் ஆன்டி-ஆக்சிடன்ட்களை சாப்பிட நினைப்பவர்களுக்கு ப்ளூ பெர்ரிகள் சிறந்த உணவாக அமைகிறது. இது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃபிரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
ப்ளூ பெர்ரி பழங்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய ரத்த அழுத்தம் குறையும். இதற்கு முக்கிய காரணம் ப்ளூ பெர்ரியில் காணப்படும் அந்தோசயானின்கள்.
கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கிறது
நமது உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் அது நம்முடைய இதய ஆரோக்கியம் மற்றும் தமனிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பிரச்சினையை சமாளிக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் ப்ளூ பெர்ரி பழங்களை சாப்பிடுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.