நோய் எதிர்ப்பு சக்தி கிடுகிடுவென அதிகமாக தினமும் காலையில் அவித்த முட்டை சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
26 September 2022, 3:53 pm

வேகவைத்த முட்டையின் நன்மைகளைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். முட்டை என்பது குழந்தைகள் முதல் சிறியவர்கள், பெரியவர்கள் வரை அனைவரது விருப்பமான உணவு என்றே சொல்லலாம். சைவ உணவு உண்பவர்களும் இன்று முட்டையை சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். குளிர்காலத்தில் முட்டை சளி போன்ற தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இதன் அதிர்ச்சியூட்டும் பலன்களை இப்போது பார்க்கலாம்.

வேகவைத்த முட்டையில் காணப்படும் சத்துக்கள்- சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இது நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். மேலும் இதில் வைட்டமின் பி12, பயோட்டின், தியாமின் மற்றும் செலினியம் உள்ளது. இந்த வைட்டமின்கள் அனைத்தும் முடி, தோல் மற்றும் உங்கள் நகங்களுக்கு மிகவும் முக்கியம். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி ஆனது சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்க உதவுகிறது. தினமும் காலை உணவாக அவித்த முட்டையை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

வேகவைத்த முட்டையின் நன்மைகள்-
* ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. இதனை சாப்பிடுவதால் உடலில் உள்ள புரதச்சத்து குறைபாடு நீங்கும்.
* உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்க முட்டையின் மஞ்சள் பகுதியை சாப்பிட வேண்டும்.
* மன அழுத்தத்தை போக்க வேண்டுமானால் வேகவைத்த முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் முட்டையில் வைட்டமின் பி12 இருப்பதால் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
* முட்டை உட்கொள்வது எலும்புகளை வலுவாக்கும் மற்றும் எலும்பு நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
* தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது கண்புரை அபாயத்தை குறைக்கிறது. ஆனால் முட்டையை நன்றாக வேகவைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வேகவைத்த முட்டைகளை சாப்பிட சரியான நேரம்: காலை உணவாக முட்டை சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!