தேசிய முந்திரி பருப்பு தினம் 2024: இந்த குட்டி பருப்புல இவ்வளவு ஊட்டச்சத்தா…???

Author: Hemalatha Ramkumar
22 November 2024, 6:42 pm

முந்திரிப் பருப்பு என்பது மிகவும் சுவையான நட்ஸ் வகைகளில் ஒன்று. அதே நேரத்தில் இது நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்குகிறது. நம்முடைய அன்றாட உணவில் முந்திரிப் பருப்பை சேர்த்து வர நம் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும். முந்திரிப் பருப்பில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் இது நமக்கு தேவையான ஆற்றலை அளித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலமாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் முந்திரி பருப்பில் நமது எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தும் காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை ஒவ்வொன்றாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இதய ஆரோக்கியம்

ஒருவேளை நீங்கள் இதய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்கள் என்றால் அந்த நிலையை மேம்படுத்துவதற்கு முந்திரி பருப்பு ஒரு சிறந்த ஆப்ஷனாக கருதப்படுகிறது. ஊட்டச்சத்து களஞ்சியமாக விளங்கும் இந்த நட்ஸ் இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள உதவும் பண்புகளை கொண்டுள்ளது. முந்திரிப் பருப்பில் காணப்படும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. 

மூளையின் ஆரோக்கியம்

முந்திரி பருப்பில் சிங்க் மற்றும் காப்பர் அதிகமாக இருப்பதால் இது நம்முடைய அறிவுத்திறன் செயல்பாடு, ஞாபக சக்தி மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இதனால் முந்திரிப் பருப்பை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்து வந்தால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். 

இதையும் படிக்கலாமே: கழுத்துல கருகருன்னு கோடுகள் தெரியுதா… இந்த ஒரே பொருள் போதும்… நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்துவிடும்!!!

உடல் எடை கட்டுப்பாடு 

உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு முந்திரிப்பருப்பு ஒரு சிறந்த வழி. ஏனெனில் இதில் அதிக கலோரி அதே நேரத்தில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. முந்திரிப் பருப்பு பசியை கட்டுப்படுத்தி நாள் முழுவதும் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. 

எலும்பு ஆரோக்கியம்

ஏற்கனவே கூறியது போல முந்திரிப் பருப்பில் காணப்படும் அதிக அளவு மெக்னீசியம் எலும்பு உருவாக்கம் மற்றும் அடர்த்தியில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. எனவே வழக்கமான முறையில் நீங்கள் முந்திரி பருப்பு சாப்பிட்டு வந்தால் உங்களுடைய எலும்புகள் வலுவாக இருக்கும். 

ஆற்றல் ஊக்கி 

முந்திரி பருப்பு ஆற்றலின் சிறந்த ஒரு மூலமாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை பொறுமையாக அதே நேரத்தில் நிலையாக வழங்குகிறது.

முந்திரி பருப்பில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை தரும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 144

    0

    0