50 மில்லியன் ஆண்டுகள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் உலகின் மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதேபோல பழங்கால உணவான தேனானது நமக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது. நமது அன்றாட வாழ்வில் இந்த இரண்டு உணவுகளையும் சாப்பிட்டு வர நமது ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை கண்கூட பார்க்கலாம். ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? வாருங்கள், தெரிந்து கொள்ளலாம்! தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
தேனில் உறவைக்கப்பட்ட பேரீச்சம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட்கள் காணப்படுகிறது. இவை செல்களில் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது. இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். அதோடு உங்கள் சருமம் பொலிவுடன் காணப்படும்.
ஹைப்பர் டென்ஷன் பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு தேனியில் ஊற வைத்த பேரீச்சம் பழம் ஒரு அருமையான உணவு. இது ரத்த அழுத்தத்தை குறைத்து, பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்துக்களை குறைக்கிறது. அதோடு இது மூளையின் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது.
தேனில் ஊற வைக்கப்பட்ட பேரீச்சம் பழத்தில் ஆர்கானிக் சல்பர் என்ற தனித்துவமான ஒரு தனிமம் காணப்படுகிறது. இந்த ஆர்கானிக் சல்பர் நமது உடலில் ஏற்படக்கூடிய அலர்ஜியை போக்க பெரிதும் உதவுகிறது. இந்த ஆர்கானிக் சல்பர் எல்லா உணவுகளிலும் இருக்காது.
இயற்கையாக ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தேனில் உறவைக்கப்பட்ட பேரீச்சம் பழம் நல்ல பலனை அளிக்கும். தினமும் இதனை சாப்பிட்டு வர கட்டாயமாக உடல் எடையானது ஆரோக்கியமான முறையில் மேம்படுத்தப்படும்.
அடிக்கடி சோர்ந்து போகும் நபர்களுக்கு தேனியில் ஊறவைக்கப்பட்ட பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஒரு அருமையான எனர்ஜி பூஸ்டராக செயல்படும். இதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதால் நீங்கள் இதனை சாப்பிட்ட உடனேயே அதிக ஆற்றலை உணர்வீர்கள்.
தேனில் உறவைத்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.