குளிர்கால நோய்களை விரட்ட காலை வெறும் வயிற்றில் முருங்கை கீரை…!!!

Author: Hemalatha Ramkumar
6 December 2024, 3:10 pm

முருங்கை இலையில் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம்முடைய உடலில் உறிஞ்சப்படுவது உறுதி செய்யப்படுகிறது. ஏனெனில் இந்த சமயத்தில் செரிமான அமைப்பில் இதனோடு போட்டி போடுவதற்கு வேறு எந்த உணவும் இல்லாத காரணத்தால் முருங்கை இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு முழுவதுமாக கிடைக்கிறது.

இதனை தினமும் செய்யும்பொழுது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல் அளவுகள், செரிமானம் மற்றும் பொதுவான ஆரோக்கியம் அதிகரிக்கும். ஃபிரெஷான முருங்கை இலைகள் உங்களுடைய ஆரோக்கியத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வெறும் வயிற்றில் முருங்கை இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நம்ப முடியாத நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது 

முருங்கை இலையில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக மலம் எளிதில் வெளியேறுவதற்கு உதவி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது. கூடுதலாக இதில் உள்ள குளுக்கோஸினோலேட்ஸ் மற்றும் ஐசோதயோசயோனேட்டுகள் போன்ற ஆரோக்கியமான பொருட்கள் குடலை சுத்தம் செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 

வழக்கமான முறையில் முருங்கை இலையை சாப்பிடுவது உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி சளி காய்ச்சல் மற்றும் பிற தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

இதையும் படிச்சு பாருங்க:  உங்க ஆரோக்கியத்திற்கு சரியான காவல் தெய்வம் இது தான்…!!!

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது 

வெறும் வயிற்றில் முருங்கை இலை சாப்பிடுவது உடலில் உள்ள வீக்கம், ஆக்சிடேட் அழுத்தத்தை குறைத்து,  எரிச்சலை போக்குகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியை கட்டுப்படுத்தி சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, உறுதியான சருமத்தை அளிக்கிறது. இதனால் சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் வயதான அறிகுறிகள் நீங்குகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற முக்கியமான மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய முருங்கை இலை உங்களுடைய ஆற்றலை அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக இரும்புச் சத்து காரணமாக ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ,செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!