டெய்லி ஒரு பல் பூண்டு உங்க லைஃபையே மாற்றிவிடும்!!!
Author: Hemalatha Ramkumar6 January 2025, 6:11 pm
‘மூலிகைகளின் அரசன்’ என்று பெரும்பாலும் அழைக்கப்படும் பூண்டு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிறந்த இயற்கையான தீர்வாக அமைகிறது. பூண்டை பச்சையாகவும், பதப்படுத்தப்படாமலும் சாப்பிடும் பொழுது அதில் உள்ள நன்மைகள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. பூண்டு என்பது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு ஊட்டச்சத்து களஞ்சியமாக விளங்குகிறது. இதில் சல்பர் காம்பவுண்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஏராளமாக காணப்படுகிறது.
பூண்டில் உள்ள அலிசின் என்ற மிகவும் வலிமையான பொருள் பூண்டை நறுக்கும் பொழுதோ அல்லது அதனை அரைக்கும்பொழுது உற்பத்தி ஆகிறது. பூண்டில் உள்ள மருத்துவ பண்புகளுக்கு இந்த அலிசின் காரணமாக அமைகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளது. தினமும் ஒரு பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கான மிகவும் எளிமையான வழிகளில் இதுவும் ஒன்று. பூண்டில் உள்ள அதிக அலிசின் அளவு நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு ரகசிய பொருளாக திகழ்கிறது.
இதய ஆரோக்கியம்
லிப்பிட் அளவை சமநிலையாக பராமரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில் பூண்டு முக்கிய பங்கு கொண்டுள்ளது.
கல்லீரலின் ஆரோக்கியம்
பூண்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதால் நம்முடைய உடலில் நச்சு நீக்க செயல்பாடு விரைவுப்படுத்தப்பட்டு, உடல் சுத்தமாகும். கல்லீரலில் உள்ள என்சைம்களை ஆக்டிவேட் செய்வதன் மூலமாக உடலில் உள்ள நச்சு கழிவுகளை பூண்டு அகற்றுகிறது.
இதையும் படிக்கலாமே: சளி, காய்ச்சல் இருக்கும் போது இந்த வகை கிச்சடி சாப்பிட்டா சீக்கிரமே சரியாகிவிடும்!!!
செரிமான ஆரோக்கியம்
நம்முடைய குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை பராமரிப்பதற்கு ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை பூண்டு தூண்டுகிறது. இதன் ப்ரீபயாடிக் பண்புகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு தேவையான போஷாக்கை வழங்கி, செரிமானத்தை தூண்டி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.
சரும ஆரோக்கியம்
பூண்டை தினமும் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு உதவி, சுற்றுச்சூழல் மாசப்படுத்திகளிடமிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.