ஹெல்தியா வெயிட் கெயின் பண்ண நினைக்குறவங்க தினமும் இதுல ஒரு ஸ்பூன் வாயில போட்டுக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
9 January 2025, 6:38 pm

பார்ப்பதற்கு என்னமோ அளவில் சிறியதாக இருந்தாலும் சூரியகாந்தி விதைகள் ஊட்டச்சத்துக்களால் நிறைந்த பொக்கிஷம். இது பல்வேறு விதமான ஆரோக்கிய பயன்களை கொண்டுள்ளது. இந்த விதைகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிலும் குறிப்பாக வைட்டமின் E அதிகமாக காணப்படுகிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, பொலிவான சருமத்தை கொடுத்து, இன்னும் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. மேலும் சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீனின் சிறந்த மூலம் என்பது பலருக்கு தெரிவதில்லை.

அதுமட்டுமல்லாமல் இந்த விதைகளை நாள் முழுவதும் சாப்பிட வேண்டிய அவசியம் கிடையாது  ஒரு நாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் சூரியகாந்தி விதை சாப்பிட்டாலே கொலஸ்ட்ரால் அளவுகள் சீராகி, செரிமானம் மேம்படுத்தப்பட்டு, அளவுக்கு அதிகமாக நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைந்து அதனால் உடல் எடை கட்டுக்குள் கொண்டு வரப்படும். எனவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான இதயம்

சூரியகாந்தி விதைகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து இருக்கிறது. இந்த இரண்டு வகையான கொழுப்புகளுமே கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க கூடியவை. இதனால் இதய ஆரோக்கியம் வலுப்பெறுகிறது.

நல்ல செரிமானம்

உங்களுடைய தின்பண்டத்தோடு இந்த சூரியகாந்தி விதைகளை சேர்ப்பது நீங்கள் செய்யக்கூடிய ஆரோக்கியமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கும். ஏனெனில் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இருக்கிறது. இதனால் இது நம்முடைய செரிமான ஆரோக்கியத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துகிறது.

இதையும் படிக்கலாமே : தலைமுடி நல்லா வளரணும்னா கொஞ்சம் கூட யோசிக்காதீங்க… கண்ண மூடிக்கிட்டு இத யூஸ் பண்ணுங்க!!!

சீரான ரத்த சர்க்கரை அளவு 

சூரியகாந்தி விதைகளில் இயற்கையாகவே நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்வதன் மூலமாக ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.

அதிக அளவு வைட்டமின் E

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் E தாவர காம்பவுண்டுகள் மற்றும் ஃபிளவனாய்டுகள் காணப்படுகிறது. இவை அனைத்துமே நம்முடைய உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவன.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 21

    0

    0

    Leave a Reply