பழங்கள் என்றாலே நம் நினைவிற்கு வரும் முதல் வார்த்தை ஆரோக்கியம் தான். ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. அதில் வைட்டமின் சி என்று சொல்லும் பொழுது நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஆரஞ்சு பழங்களே. ஆரஞ்சு பழங்களை தினமும் சாப்பிடுவது நம்மை பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு, நமது சரும ஆரோக்கியத்தையும் பேணு உதவும். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி, ஃபிளவனாய்டேகள் மற்றும் கெரட்டினாய்டுகள் நிறைந்துள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க தேவையான சத்துக்கள் ஆகும். இதனால் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
ஒரு ஆராய்ச்சியின் படி, நமது உணவில் அதிக அளவிலான சிட்ரஸ் பழங்களை சேர்ப்பது நாள்பட்ட நோய்களான நீரழிவு மற்றும் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, கல்லீரல், கழுத்து, வாய், தலை மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோய்களை தடுக்க வல்லது என்பது தெரிய வந்துள்ளது.
ஆரஞ்சுகள் இரும்பு சத்தின் சிறந்த மூலமாக இல்லாவிடிலும், அது அதிக அளவிலான வைட்டமின் சி யை கொண்டுள்ளது. வைட்டமின் சி ஆனது உடலின் இரும்பு சத்து உறிஞ்சும் திறனை அதிகரிக்க கூடிய ஊட்டச்சத்து ஆகும். இதனால் ரத்த சோகை ஏற்படும் அபாயம் குறைகிறது.
பழங்களை தினசரி வீதம் சாப்பிடுவது நம் உடலுக்கு வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து நம்மை பலவிதமான நோய்களிலிருந்து காக்கிறது.
பழங்கள் சாப்பிடுவது உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது காயங்களை விரைவில் ஆற்ற உதவுகிறது. அதோடு பழங்களில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் இது எலும்புகள், தசைகள் மற்றும் உறுப்புகளின் வலிமைக்கு காரணமாக அமைகிறது.
ஆரஞ்சு பழத்தில் காணப்படும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த ஆரஞ்சு பழங்கள் நம் சருமத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதங்களில் இருந்து நம்மை பாதுகாத்து சருமத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்கிறது.
உங்களுக்கு அதிகப்படியான முடி உதிர்வு இருந்தால் தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள் இதனால் முடி உதிர்வு கட்டுப்படுவதோடு, புதிய முடி வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும். அடுத்தபடியாக ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் A சத்தானது கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. தினமும் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.