இதயத்துல ஆரம்பிச்சு சருமம் வரை எல்லாத்துக்கும் நல்லது மட்டுமே செய்யும் ஊற வைத்த முந்திரி பருப்பு!!!

Author: Hemalatha Ramkumar
2 January 2025, 4:34 pm

தினமும் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலமாக உங்களுடைய நாளை நீங்கள் ஆரம்பிக்கும் பொழுது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இரவு முழுவதும் முந்திரி பருப்பை ஊற வைப்பது அதனை மென்மையாக மாற்றி, செரிமானம் ஆவதற்கு எளிதாக்கி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். ஊறவைத்த முந்திரி பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டின் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்றவை காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள். ஊறவைத்த முந்திரிப் பருப்பு உங்களுடைய ஆற்றலை அதிகரிப்பதற்கான ஒரு இயற்கை வழி.

ஊறவைத்த முந்திரிப் பருப்பை உங்களுடைய உணவில் சேர்ப்பது, அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிடும் பொழுது உங்கள் உடலுக்கு தேவையான எரிபொருள் கிடைத்து, ஆரோக்கியம் மேம்படும். ஆகவே தினமும் காலை ஊற வைத்த முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட செரிமானம் 

ஊற வைத்த முந்திரிப்பருப்பு சாப்பிடுவது உங்களுடைய செரிமானத்தை அதிகமாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து நம்முடைய செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதய ஆரோக்கியம்

முந்திரி பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், அதிலும் குறிப்பாக மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இருப்பதால் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருகிறது.

இதையும் படிக்கலாமே: மொபைல் ரொம்ப அதிகமா யூஸ் பண்ற மாதிரி தெரியுதா… இத ஈசியா சமாளிக்க சில டிரிக்ஸ் இருக்கு!!!

அதிக ஆற்றல் 

முந்திரிப் பருப்புகள் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்களின் இயற்கையான மூலமாக அமைகிறது. இதனால் நம்முடைய உடலுக்கு இது இயற்கை ஆற்றல் ஊக்கியாக அமைந்து, நாள் முழுவதும் உங்களை அதிக ஆற்றலோடு வைக்கிறது.

சரும ஆரோக்கியம் 

ஊறவைத்த முந்திரி பருப்புகளில் உள்ள அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் இயற்கையான முறையில் உங்களுக்கு பொலிவான சருமத்தை வழங்குகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!