அத்திப்பழம் என்பது பாரம்பரிய இந்திய வைத்தியங்களில் ஒரு முக்கியமான பகுதியாக அமைகிறது. இது பெரும்பாலும் பாலுடன் ஊற வைத்து சாப்பிடப்படுகிறது. பல தலைமுறைகளாக அத்திப்பழம் சருமம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை செய்து வருகிறது. ஆகவே இந்த பதிவில் பாலில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஊட்டச்சத்து உறிஞ்சுதல்
பாலில் அத்திப்பழங்களை ஊற வைப்பதால் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலில் உடனடியாக உறிஞ்சப்படுகிறது. பால் என்பது கால்சியத்தின் மூலமாக அமைகிறது. மேலும் இந்த காம்பினேஷன் கால்சியம் நம்முடைய உடலில் உறிஞ்சப்படுவது அதிகமாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
அத்தி பழங்களில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் காம்பவுண்டுகள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த காம்பவுண்டுகள் செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாத்து நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் அத்தி பழங்களில் உள்ள இரும்பு சத்து, சிங்க் மற்றும் காப்பர் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. இரும்புச்சத்து என்பது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு அவசியமானது. இந்த சிகப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதிலும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. மேலும் சிங்க் மற்றும் காப்பர் நோய் எதிர்ப்பு செல்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்கிறது.
எலும்பு ஆரோக்கியம்
பாலில் உள்ள கால்சியம் அத்தி பழங்களில் உள்ள கால்சியத்தோடு இணைந்து உங்களுடைய எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அத்தி பழங்களில் உள்ள வைட்டமின் K எலும்பு மெட்டபாலிசம் மற்றும் கால்சியம் பயன்பாட்டில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.
ஆரோக்கியமான சருமம்
அத்தி பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்கள் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமத்திற்கு வயதான தோற்றத்தை தருகிறது. ஆகவே பாலில் ஊற வைத்த அத்தி பழங்களை சாப்பிடுவது சுருக்கங்களை குறைத்து, சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது.
இதையும் படிக்கலாமே: டிரை ஸ்கின் பிரச்சினைக்கு தீர்வு தரும் வாழைப்பழ ஃபேஷியல்!!!
ஆற்றல்
அத்திப்பழங்கள் என்பது சர்க்கரைகளின் இயற்கையான மூலமாக அமைகிறது. அதே நேரத்தில் பால் புரோட்டீன் மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலம். இதனால் காலையில் இதனை சாப்பிடுவது நமக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
ஊற வைத்த அத்தி பழங்களை சாப்பிடுவது உங்களுடைய நாளை ஆரம்பிப்பதற்கான ஒரு ஆரோக்கியமான வழி. எனினும் இந்த வைத்தியம் அனைவருக்கும் ஏற்றது கிடையாது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அல்லது பாலுக்கு அலர்ஜி கொண்டவர்கள் இதனை சாப்பிட வேண்டாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.