காலை சீக்கிரமே எழுவதால எவ்வளவு பலன் கிடைக்குது பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
11 September 2024, 3:25 pm

நாளின் பிற நேரங்களை காட்டிலும் காலைகள் என்பது பொறுமையாக அனுபவித்து மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒன்று. ஒவ்வொருவருக்கும் காலை பின்பற்றுவதற்கு குறிப்பிட்ட ஒரு வழக்கம் இருக்கும். காலை எழுந்ததும் காலை கடன்களை முடித்துவிட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பு காலையில் ஒரு சில மணி நேரம் வீட்டில் செலவிடுவோம். அந்த சமயத்தில் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவது நம்முடைய மனது மற்றும் உடலை மீட்டமைத்து நாளின் மீதமுள்ள நேரத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ளலாம். காலை விரைவாக எழுவதால் வீட்டில் செலவிடுவதற்கு உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். மேலும் உங்களுடைய நாளை நீங்கள் பொறுமையாக ஆரம்பிக்கலாம், அவசர அவசரமாக ஆரம்பிக்க வேண்டிய தேவை இருக்காது. அதிகாலை எழுவதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அற்புதமான பலன்கள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

மற்றவர்கள் விழிப்பதற்கு முன்பு அதிகாலை விரைவாக எழுவது நமக்காக நாம் போதுமான அளவு நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. தியானம் அல்லது வொர்க் அவுட் செய்வது போன்ற பல்வேறு விதமான வேலைகளுக்கு நமக்கு கூடுதல் நேரம் கிடைக்கும். மேலும் நமக்கு வாழ்க்கையில் கிடைத்தவற்றுக்காக நன்றி செலுத்தவும், வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கவும் நீங்கள் டைரி எழுதுவதைக் கூட முயற்சி செய்து பார்க்கலாம்.

அலுவலகத்திற்கு செல்லும் பொழுது கடைசி நிமிடத்தில் கிளம்பி ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு, டென்ஷன் ஆகி அலுவலகத்தில் தேவையில்லாத காரணங்கள் சொல்லி, திட்டு வாங்குவதற்கு பதிலாக அதிகாலை நீங்கள் எழுந்து விட்டால் அலுவலகத்திற்கு முன்னதாகவே கிளம்பி சரியான நேரத்திற்கு நிதானமாக செல்லலாம்.

நாம் அதிகாலை எழும்பொழுது நம்முடைய உடலில் உள்ள சர்க்காரியன் கடிகாரம் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும். இதனால் இரவு நேரத்தில் நமக்கு தூக்கம் விரைவாக வந்துவிடும். மேலும் தினமும் நீங்கள் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்யலாம். காலை ஃபிரஷாக எழுந்து மகிழ்ச்சியோடு அந்த நாளுக்கான வேலைகளை ஆரம்பிக்கலாம்.

நமக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காத போது அது நம்முடைய சருமம் மற்றும் தலைமுடியின் தரத்தை பாதிக்கலாம். இதனால் வெளிர் சருமம், முகப்பரு, சுருக்கங்கள் போன்றவை உருவாக வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியமான தூக்கம் அட்டவணையை பின்பற்றுவது உங்களுடைய தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.

காலை உணவை நம்மில் பெரும்பாலானோர் அவசர அவசரமாக விழுங்குவதுண்டு. ஆனால் காலை உணவை நாம் மிகவும் பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அதிகாலை எழுந்து விட்டால் அதனை நீங்கள் நிச்சயமாக செய்யலாம். மேலும் உங்கள் குடும்பத்தோடு கூடுதல் நேரம் செலவழிப்பதற்கும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

  • thalapathy 69 is telugu movie remake தெலுங்கு பட ரீமேக்தான் தளபதி 69 கதை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலா..!!
  • Views: - 169

    0

    0